'எப்ப வருவார்னு தெரியலையே..? 2 மாதமாக சிறையில் இருக்கும் பிரபல நடிகை.. காத்திருக்கும் படக்குழு!

By

பெங்களூரு: பிரபல நடிகை சிறையில் இருப்பதால், அவர் நடித்துக் கொண்டிருந்த படக்குழுவினர், அவருக்காகக் காத்திருக்கின்றனர்.

பிரபல கன்னட ஹீரோயின் ராகிணி திவேதி. இவர், தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக நிமிர்ந்து நில் படத்தில் நடித்திருந்தார்.

அர்ஜுன் ஜோடியாக மெய்காண் என்ற படத்திலும் நடித்தார். இந்தப் படம் வெளியாகவில்லை.

சிறையில் ராகிணி

சிறையில் ராகிணி

கன்னடத்தில் சங்கர் ஐபிஎஸ், கெம்பே கவுடா, வில்லன், சிவா, பங்காரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில், மேஜர் ரவி இயக்கிய கந்தகார் படத்திலும் நடித்துள்ள அவர், இந்தியில் ஆர்.ராஜ்குமார் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இவர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பரப்பன அக்ரஹாரா சிறை

பரப்பன அக்ரஹாரா சிறை

போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, ராகிணி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணியும் இதே விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜாமீன் நிராகரிப்பு

ஜாமீன் நிராகரிப்பு

நடிகை ராகிணி, கடந்த 2 மாதமாக சிறையில் இருக்கிறார். அவருக்கான ஜாமீன் மனுக்கள் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டு விட்டன. இதனால் அவருடைய சினிமா வாழ்க்கைப் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. அதை நியாயப்படுத்தும் விதமாக, அவர் நடிக்கும் படத்தில் இருந்து நீக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

எப்போது வெளியே

எப்போது வெளியே

நடிகை ராகிணி, காந்திகிரி என்ற படத்தில் நடித்து வந்தார். இதை ரகு ஹாசன் இயக்குகிறார். பிரேம் ஹீரோவாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்க இருந்தனர். ராகிணி இல்லாததால், தள்ளி வைக்கப்பட்டது. அவர் எப்போது வெளியே வருவார் என உறுதியாகத் தெரியாத நிலையில் அவரை மாற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது.

காட்சிகளை மாற்றினால்

காட்சிகளை மாற்றினால்

ஆனால், அது சாத்தியமில்லை என்றும் படக்குழு கூறுகிறது. ராகிணி திவேதியின் கால்ஷீட் இன்னும் 12 நாட்கள் தேவைப்படுகிறது. இதுவரை எடுத்த காட்சிகளை மாற்றினால், அது அதிக பட்ஜெட்டில் கொண்டுவிடும் என்பதால் அதற்கு வாய்ப்பில்லை. அதனால் என்ன செய்யலாம் என்று மொத்த டீமும் காத்திருக்கிறது.

படத்தின் நிலை

படத்தின் நிலை

இதே போல பிரகாஷ் பெலாவடி இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார், நடிகை ராகிணி. அந்தப் படத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதே போல சஞ்சனா கல்ராணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அவர் நடிக்கும் படக்குழுவும் அவர் வருகைக்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X