எந்திரன் 2... கடினமான காட்சிகள்.. மருத்துவர்கள் ஆலோசனை.. நடிப்பாரா ரஜினி?
ரஜினியிடம் உடலை வருத்தி ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுரை கூறியுள்ளதால் எந்திரன் 2-ம் பாகத்தில் அவர் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சியை உருவாக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இந்த கதை குறித்து ரஜினியிடமும் ஆலோசனை செய்தார். இந்தப் படத்தில் நடிக்க ரஜினியும் சம்மதித்திருந்தார்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைப் பெற்று நலமடைந்த ரஜினி, இரண்டு ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் ஓய்வெடுத்து வந்தார்.

கோச்சடையான்
இடையில் மகள் சவுந்தர்யா இயக்கிய கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தார். அதன் பெரும் பகுதி படப்பிடிப்பு ஸ்டுடியோவிலேயே நடந்ததால் சிரமமின்றி நடித்தார். படம் வெளியாகி, நல்ல வரவேற்புடன் 50வது நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது.

லிங்கா
தொடர்ந்து 'லிங்கா' படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரஜினி. இது கிட்டத்தட்ட வரலாற்றுப் படம்தான். பிரிட்டிஷ் இந்தியா காலத்து கதை. பாதிப் படம் முடிந்துவிட்டது. அடுத்த மாத இறுதிக்குள் ஷூட்டிங் முடிந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எந்திரன் 2
லிங்கா படம் முடிந்ததும் எந்திரன் 2-ம் பாகத்தை எடுக்க இயக்குனர் ஷங்கர் தயாராகி வருகிறார். இதற்கான கதையையும் அவர் தயார் செய்து விட்டார். சமீபத்தில் 'லிங்கா' படப்பிடிப்பு நடந்த ஸ்டிடுடியோவுக்கு சென்று ரஜினியை ஷங்கர் சந்தித்தார். அப்போது எந்திரன் 2-ம் பாகத்தை எடுப்பது பற்றி அவர்கள் பேசியதாக தெரிகிறது.

மருத்துவர்கள் அட்வைஸ்
எந்திரன் 2-ம் பாகத்தில் ரஜினி உடலை வருத்தி நடிக்க வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த அளவு ரிஸ்க் தேவையா என யோசிக்குமாறு ரஜினிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். ரஜினி குடும்பத்தினரும் அவரது உடல்நிலைதான் முக்கியம் என்று கூறியுள்ளனர்.

சின்ன இடைவெளி...
லிங்கா முடிந்தபிறகு, பூரணமான ஓய்வு எடுத்து, அனைத்து வகையிலும் ரஜினிக்கு வசதியாக இருந்தால் மட்டுமே இந்தப் படத்தில் அவர் நடிக்கட்டும் என்ற முடிவுக்கு ஷங்கர் வந்திருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











