ரஜினி சர்கார் அமைக்கும் முன்பு ஒத்திகையா இந்த தர்பார்?
Recommended Video

சென்னை: தர்பார் என்று ஒரு தலைப்பை வைத்து மக்களை அதை பேற்றியே பேச வைத்துவிட்டார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தர்பார் என்று பெயர் வைத்துள்ளனர். போஸ்டரை பார்த்தே ரசிகர்கள் கதை இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று யூகிக்கத் துவங்கிவிட்டனர்.
தர்பார் என்ற பெயரே மிகவும் பிடித்துள்ளது.
ரஜினி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராகவும் சென்னையில் நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் , போலீசாரிடையே மோதல் ஏற்பட்டது. அதை பார்த்த ரஜினி போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சக்கட்டம் என்று ட்வீட் செய்தார். இந்நிலையில் தர்பார் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

சர்கார்
சர்கார் படத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் சி.இ.ஓ. அரசை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தர்பார் என்று பெயர் வைத்திருப்பதால் நிச்சயம் இந்த படத்திலும் அரசியல் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சி
ரஜினி அரசியல் கட்சி துவங்கவிருப்பதால் தர்பாரில் போலீஸ் அதிகாரியாக தர்பார் செய்வாரோ?. மும்பை பின்னணியை காட்டுவதால் மத்திய அரசை திருத்துவாரா ரஜினி என்றெல்லாம் கேள்விகள் எழுகிறது.

முருகதாஸ்
சர்கார், தர்பார் இரண்டு தலைப்புகளும் ஒரே மாதிரியாக உள்ளது. சர்கார் போன்றே தர்பாரிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சர்காரில் சில காட்சிகளை வைத்துவிட்டு முருகதாஸ் படாதபாடு பட்டார். யார் சொன்னாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தைரியமாக சொன்ன அவர் தர்பாரில் நிச்சயம் ஏதோ மெசேஜ் வைத்திருப்பார். ரிஸ்க் எல்லாம் அந்த மனுஷனுக்கு ரஸ்க் மாதிரி ஆகிவிட்டது.

2 விதம்
தர்பாரில் ரஜினி நேர்மையான போலீஸ் அதிகாரியாக மட்டும் இருக்கலாம். இல்லை என்றால் அரசியலும் பேசலாம். இந்த தர்பார் எந்த வகையை சேர்ந்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நிஜத்தில் சர்கார் அமைக்கும் முன்பு திரையில் தர்பார் நடத்தப் போகிறார் ரஜினி.


Click it and Unblock the Notifications











