twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்காக பிரச்சாரம் செய்கிறாரா ரஜினிகாந்த்?: நடிகை சுமலதா விளக்கம்

    By Siva
    |

    பெங்களூர்: மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் ரஜினிகாந்த் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து சுமலதா விளக்கம் அளித்துள்ளார்.

    மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா லோக்சபா தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    அம்பரீஷின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் சுமலதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் என்று தகவல் வெளியானது.

    அந்த இயக்குநர் சுட்டுட்டாருய்யா, மறுபடியும் கதையை சுட்டுட்டாருய்யா அந்த இயக்குநர் சுட்டுட்டாருய்யா, மறுபடியும் கதையை சுட்டுட்டாருய்யா

    சுமலதா

    சுமலதா

    எனக்காக பிரச்சாரம் செய்ய ரஜினிகாந்த் வர மாட்டார். நான் யாரையும் பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை. எனக்காக ரஜினி பிரச்சாரம் செய்யப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று சுமலதா தெரிவித்துள்ளார்.

    தர்ஷன்

    தர்ஷன்

    பிரபல கன்னட நடிகர்களான யஷ் மற்றும் தர்ஷன் சுமலதாவுக்கு ஆதரவாக உள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தர்ஷன் தனது புதுப்பட வேலையை கூட தள்ளிப் போட்டுள்ளார். இந்நிலையில் தர்ஷன் வீட்டில் சிலர் கல்லெறிந்துள்ளனர். இதையடுத்து அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகா்பபு போடப்பட்டுள்ளது.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    எங்கள் போனை டேப் செய்வது, உளவுத் துறை அதிகாரிகளை வைத்து உளவு பார்ப்பது எல்லாம் முதல்வர் குமாரசாமிக்கு அழகு அல்ல. குமாரசாமி தனது மொத்த குடும்பத்துடன் பிரச்சாரம் செய்யட்டும். அதில் எனக்கு எந்த பிரச்சனை இல்லை. ஆனால் தர்ஷன், யஷ், என் மகன் அபிஷேக் பிரச்சாரம் செய்யும்போது மட்டும் மின்வெட்டு ஏற்படுத்துவது, கேபிள் கனெக்ஷனை கட் பண்ணுவது ஏன் என்று சுமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.

    நிகில்

    நிகில்

    முதல்வரின் மிரட்டல்களுக்கு நாங்கள் பணிந்துவிட மாட்டோம் என்கிறார் சுமலதா. சுமலதா போட்டியிடும் அதே மாண்டியா தொகுதியில் தான் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். சுமலதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் யஷ் மற்றும் தர்ஷனை குமாரசாமி திருடர்கள் என்று விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Sumalatha has explained that Rajinikanth is not campaigning for her in the ucoming Lok Sabha election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X