ரஜினி ஓட்டுப்போட வருவாரா? வரமாட்டாரா? ஓயாத சர்ச்சை.. கிளம்பிய யூகங்களும் கேள்விகளும்!

சென்னை: தலைவர் 169 படத்தின் புரமோ ஷூட்டிங்கிற்கு சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். நேற்றுக் கூட ஒரு அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இன்று நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை ஓட்டுப்போட வராதது ஏகப்பட்ட யூகங்களுக்கும் கேள்விகளுக்கும் வழிவகுத்துள்ளன.

நடிகர் ரஜினிகாந்தை போல விஜயகாந்தும் இன்று ஓட்டுப் போட வரவில்லை. ஆனால், பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் ஓட்டுப் போட வரவில்லை என்கிற காரணத்தை கூறியுள்ளார்.

வருவாரா மாட்டாரா

வருவாரா மாட்டாரா

நடிகர் ரஜினிகாந்த் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை வாக்கு செலுத்த வராதது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறி உள்ளது. எப்போதுமே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வருவதற்கு முன்பாகவே வாக்குச்சாவடிக்கு வந்து முதல் நபராக வாக்கு செலுத்தி விட்டு செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ரஜினி,

தலைவர் 169 புரமோ ஷூட்டிங்

தலைவர் 169 புரமோ ஷூட்டிங்

அண்ணாத்த படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான நிலையில், மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகப் போகும் தலைவர் 169 படத்தின் புரமோ ஷூட்டிங்கில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தான் இந்த ஷூட்டிங் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திறப்பு விழா நிகழ்ச்சி

திறப்பு விழா நிகழ்ச்சி

அதுமட்டுமின்றி, நேற்றுக் கூட நண்பர் ஒருவரின் அலுவலக திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில், இன்று தேர்தலில் வாக்கு செலுத்த வராமல் நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலை புறக்கணித்து உள்ளாரா? அல்லது அவரது உடல்நிலையில் ஏதாவது கோளாறு ஏற்பட்டுள்ளதா? என ஏகப்பட்ட கேள்விகளும் யூகங்களும் கிளம்பி உள்ளன.

மருத்துவர்கள் ஆலோசனை

மருத்துவர்கள் ஆலோசனை

கொரோனா பரவல் காரணமாக அதிகமாக கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டும் என அவரது மருத்துவர்கள் கூறியுள்ள ஆலோசனையின் பேரில், இந்த தேர்தலில் வாக்கு செலுத்துவதை நடிகர் ரஜினிகாந்த் தவிர்த்துள்ளார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

நடிகர் ரஜினிகாந்த் சமீப காலமாக ஏகப்பட்ட மன உளைச்சலில் உள்ளார் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது உடல்நலம் சீராக இருக்க வேண்டும் என்றும் அவருக்கு எந்த தீங்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்றும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மற்ற கட்சிகளுக்கு

மற்ற கட்சிகளுக்கு

மேலும், நடிகர் ரஜினிகாந்த் இனிமே அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்த நிலையில், அவரது ரசிகர்கள், மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்ற கட்சிகளுக்கு தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் மகள்கள் என யாருமே ஓட்டுப்போட இன்னமும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X