twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யாலாம் ஒளிப்பதிவு சட்டம் 2021-க்கு எதிராக குரல் கொடுப்பார்களா?

    |

    சென்னை: தணிக்கைக் குழு ஒரு படத்தை தணிக்கை செய்து சான்றிதழ் அளித்த பிறகும் அந்த படம் குறித்த புகார்கள் எழுந்தால், மத்திய அரசின் குழு அந்த படத்தை தணிக்கை செய்யவும் தடை செய்யவும் முடியும் என்கிற மாற்றங்களுடன் உருவாக்கப்பட உள்ள ஒளிப்பதிவு சட்டம் 2021க்கு எதிராக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் குரல் கொடுப்பார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    ஏற்கனவே உலகநாயகன் கமல்ஹாசன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாலிவுட் பிரபலங்களான அனுராக் காஷ்யப், ஃபர்கான் அக்தர், ஹன்சல் மேத்தா, சபானா ஹாஸ்மி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டுள்ளனர்.

    அசுரன் ஒளிப்பதிவு.. வேல்ராஜுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்.. மாஸ் காட்டும் விஐபி இயக்குநர்!அசுரன் ஒளிப்பதிவு.. வேல்ராஜுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்.. மாஸ் காட்டும் விஐபி இயக்குநர்!

    அடக்குமுறையா

    அடக்குமுறையா

    Cinematograph Act 1952வில் சில மாற்றங்களை கொண்டு வந்து Cinematograph Act 2021ஐ அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. வரும் ஜூலை 2ம் தேதிக்குள் பொதுமக்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் தங்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை தெரிவிக்கலாம் என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது. தொடர்ந்து மீடியா, சினிமா, கல்வி மற்றும் விவசாயம் என பலவற்றையும் கட்டுப்படுத்த மத்திய அரசு செய்யும் அடக்குமுறை வேலை என இதற்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

    டம்மியாகும் தணிக்கை குழு

    டம்மியாகும் தணிக்கை குழு

    இந்த சட்டத்திருத்த மசோதா அமலுக்கு வந்தால் அதன் பிறகு தணிக்கை குழு முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியாது என்றும், தணிக்கை செய்யப்பட்ட படங்கள் மேல் புகார்கள் வரும் பட்சத்தில் மத்திய அரசின் குழு ஒன்று அந்த படத்தை ஆய்வு செய்து அதனை தடை செய்யவோ, சென்சார் செய்யவோ முழு அதிகாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    பாலிவுட்டில் கடும் எதிர்ப்பு

    பாலிவுட்டில் கடும் எதிர்ப்பு

    மத்திய அரசின் இந்த புதிய சட்டத்திருத்தம் நேரடியாக பாலிவுட்டில் மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்பதால் ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் இந்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டு வருகின்றனர். இயக்குநர் அனுராக் காஷ்யப், ஃபர்கான் அக்தர், சோயா அக்தர், சபானா ஹஷ்மி, ஹன்சல் மேத்தா, நந்திதா தாஸ், திபாகர் பானர்ஜி என பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    கமல் கண்டனம்

    கமல் கண்டனம்

    தென்னிந்தியாவிலும் இந்த சட்டத்திற்கு எதிராக கடும் கண்டனங்கள் குவியத் தொடங்கி இருக்கின்றன. நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த சட்டத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பு குரலை பதிவு செய்துள்ளனர். இந்தியாவின் மூன்று குரங்குகள் போல சினிமா, மீடியா மற்றும் கல்வி என்றுமே செயல்படாது என கமல் காட்டமாகவே நேற்று ட்வீட் போட்டிருந்தார்.

    மருத்துவமனையில் ரஜினிகாந்த்

    மருத்துவமனையில் ரஜினிகாந்த்

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சட்டம் குறித்து அவரால் தற்போது எந்தவொரு கருத்தையும் சொல்ல முடியாது என்றே தெரிகிறது. அவரது கவனத்திற்கு இது சென்றதா என்றும் தெரியவில்லை.

    முன்னணி நடிகர்கள்

    முன்னணி நடிகர்கள்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் இதற்கு எதிராக குரல் கொடுப்பார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. நடிகர் விஜய், அஜித், சூர்யா, விஜய்சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த Cinematograph Act 2021-க்கு எதிராக தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய முன் வருவார்களா என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன.

    English summary
    After Kamal Haasan raise his voice against Cinematograph act 2021, will Rajinikanth, Vijay, Ajith and Suriya raise their voice against this act.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X