Jailer Box Office: ஓவர்சீஸில் கபாலி வசூலை முந்துமா ஜெயிலர்?.. அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட் லோடிங்!
சென்னை: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஓமன் என ஏகப்பட்ட ஓவர்சீஸ்களில் ஜெயிலர் படத்தின் ப்ரீ புக்கிங் தீயாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் வெளிநாடுகளில் நடத்திய வசூல் வேட்டை தான் 400 கோடி மற்றும் 500 கோடி வசூல் வேட்டைக்கு காரணமாக அமைந்தது.

இந்நிலையில், அதே போன்றதொரு வசூல் வேட்டையை ஜெயிலர் படம் நடத்தும் என்றும் ஓவர்சீஸில் இதுவரை அதிக வசூல் ஈட்டிய தமிழ் படங்களில் முதலிடத்தில் உள்ள கபாலி படத்தின் வசூலை முறியடிக்குமா ஜெயிலர் என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.
லாஸ் வீகாஸிலும் ரஜினி ராஜ்ஜியம்: அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் டைம் ஸ்கொயர் இடத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக ப்ரோமோஷன் செய்த நிலையில், தற்போது லாஸ் வீகாஸில் உள்ள பில் போர்டுகளிலும் ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும், ஆஸ்திரேலியா, ஓமன், துபாய் என பல இடங்களிலும் சூப்பர்ஸ்டார் கொடி தான் பறக்கிறது. இந்த முறை ஜெயிலர் படம் மிஸ்ஸே ஆகாது என ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகப்பெரிய நம்பிக்கையுடன் படத்தை பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
5 லட்சம் டாலர்கள் வசூல்: அமெரிக்காவில் டிக்கெட் புக்கிங் ஆரம்பமான நிலையில், ஜெயிலர் படத்துக்கு இதுவரை 5 லட்சம் டாலர்கள் வரை வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓவர்சீஸில் அதிகபட்சமாக வசூல் செய்து இதுவரை கபாலி படம் தான் முதலிடத்தில் உள்ளது.
அதற்கு பின்னர் தான் பொன்னியின் செல்வன், விக்ரம் உள்ளிட்ட படங்களின் வசூல் உள்ளன. இந்நிலையில், கபாலி படத்துக்கு பிறகு மிகப்பெரிய அளவுக்கு வெளிநாடுகளில் ஜெயிலர் படத்துக்குத் தான் பல்க் புக்கிங் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.
கபாலியை முந்துமா: ஓவர்சீஸ் வசூலில் கபாலியை ஜெயிலர் படம் முந்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்தமாக 2.0 படத்தின் வசூலை முந்தினால் தான் ரஜினிகாந்த் ரெக்கார்டு மேக்கர் என கலாநிதி மாறன் பேசியதற்கு சரியாக இருக்கும் என்றும் ஜெயிலர் படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
படத்தின் கதை மற்றும் திரைக்கதையை நெல்சன் தீயாக அமைத்து இருந்தாலே போதும், வசூல் வேட்டையனாக ரஜினிகாந்த் மாறிவிடுவார் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











