அடுத்த ஆரி அர்ஜுனனாக மாறுவாரா ராஜு ஜெயமோகன்? எதிர்க்கும் ஹவுஸ்மேட்ஸ்.. அதிகரிக்கும் ரசிகர்கள்!

சென்னை: இதுவரை யார் வம்புக்கும் போகாமல் இருக்கும் ராஜு ஜெயமோகனை இந்த வாரம் நிறையவே சீண்டி விட்டுள்ளனர்.

அதுவும் இரவு நேரத்தில் ஐஸ் வாட்டரை கொண்டு மற்ற ஹவுஸ்மேட்கள் தண்ணி ஊற்றுவது மிகப்பெரிய கொடுமையான விஷயம்.

கடந்த சீசனில் ஆரியை ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் வெறுத்து அவருக்கு எதிரான வேலைகளை செய்ய செய்ய அவருக்கான ஆதரவு வெளியே பெருகியது. அதே போல இந்த சீசனிலும் ராஜுவுக்கு அது நடக்குமா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

சிங்கமாக சீறிய ஆரி

சிங்கமாக சீறிய ஆரி

வார வாரம் வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் எனக் கூறி ஆரி அர்ஜுனனை கடந்த சீசன் போட்டியாளர்கள் அடிக்கடி சிறையில் தள்ளிய நிலையில், ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் இடம்பெற்றாலும் முதல் நபராக சேவ் ஆகி ரசிகர்களின் வாக்குகளை வென்றெடுத்த ஆரி ஒரு கட்டத்தில் கோபத்தை எல்லாம் சிங்க கர்ஜனையாக வெளிப்படுத்திய காட்சி கடந்த சீசனின் ஹைலைட்டான ஒன்று. அது தான் அவருக்கு டைட்டிலை தூக்கித் தந்தது.

வம்புக்கு போகாமல்

வம்புக்கு போகாமல்

இந்த சீசனில் யார் வம்புக்கும் போகாமல் தேவையில்லாமல் கன்டென்ட் கொடுக்கிறேன் என்கிற பெயரில் கத்தி கூச்சல் போடாமல் இயல்பாக இருந்து ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகிறார் ராஜு ஜெயமோகன். ராஜு ஒரு டஃப் ஆன போட்டியாளர் என்பதை புரிந்து கொண்ட ஹவுஸ்மேட்கள் அவரை காலி செய்ய வேண்டும் என்றே தற்போது அவரை டார்கெட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அடுத்த ஆரி

அடுத்த ஆரி

சாந்தமாக கோபம் வந்தாலும் சட்டையராக கலாய்த்து அந்த பிரச்சனையை கடந்து வருகிறார் ராஜு என அக்‌ஷரா உள்ளிட்ட ஹவுஸ்மேட்கள் அவர் குறித்து சரியாக சொன்னாலும், மற்ற ஹவுஸ்மேட்ஸ் ராஜுவை வெறியேற்ற திட்டமிட்டு ஒவ்வொரு செயலாக செய்து வருகின்றனர். இதன் காரணமாக சீக்கிரமே ராஜு பர்ஸ்ட் அவுட் ஆகி அடுத்த ஆரி போல சீறுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டைட்டில் கிடைக்குமா

டைட்டில் கிடைக்குமா

இதுவரை இருக்கும் போட்டியாளர்களில் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல ராஜு ஜெயமோகனுக்கு அதிக தகுதிகள் இருப்பதாகவும், தொடர்ந்து இனி அவர் நாமினேட் செய்யப்பட்டால் ரசிகர்கள் அவருக்கு ஓட்டுப் போட்டு முதல் நபராக காப்பாற்ற தயாராக உள்ளனர் என்றும் இந்த சீசனின் டைட்டிலை தட்டிச் செல்ல ராஜு ஜெயமோகனுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் ஏகப்பட்ட ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X