காத்ரீனாவிடம் ‘வைரத்தோடு’ தந்து காதலைச் சொல்லப் போகும் ரன்பீர்....
மும்பை: காத்ரீனா கைபிடம் தனது காதலை மனம் திறந்து சொல்லப் போகிறாராம் ரன்பீர் கபூர். இதுதான் பாலிவுட்டில் தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் முக்கிய கிசுகிசுவாக உள்ளது.
வழக்கமாக எல்லோரும் விரலில் மோதிரம் போட்டு காதலையும், திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தையும் தெரிவிப்பார்கள். ஆனால் இதில் வித்தியாசமாக செயல்படப் போகிறார் ரன்பீர் என்கிறார்கள்.
அதாவது காத்ரீனா காதில் வைரத் தோடை அணிவிக்கும் முடிவில் இருக்கிறாராம் அவர். அந்தத் தோடைக் கூட அவர் ஏற்கனவே வாங்கி விட்டதாக சொல்கிறார்கள்.

சல்மானோடு கிசுகிசு...
சல்மான் கான் பாதுகாப்பில் முன்பு இருந்தவர் காத்ரீனா. ஆனால் பின்னர் அந்த வளையத்தை விட்டு வெளியே வந்து விட்டார்.

பரபர போட்டோக்கள்...
சில மாதங்களாக அவர் ரன்பீரின் அன்பில் நனைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இருவரையும் சேர்த்து பல இடங்களில் பலர் பார்த்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களும் கூட வந்துள்ளன.

பிறந்தநாள் பரிசு....
இந்த நிலையில் ரன்பீர் தனது பிறந்த நாளன்று காத்ரீனாவிடம் தான் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறத் தயாராகி விட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நகை பர்சேஸ்...
சமீபத்தில் காத்ரீனாவை அழைத்துக் கொண்டு முக்கியமான ஷாப்பிங்கி்ல் ஈடுபட்டாராம் ரன்பீர். அப்போது அவருக்காக சில நகைகளை வாங்கினராம் ரன்பீர்.

வைரத்தோடு....
வழக்கமாக திருமணம் செய்து கொள்ள விரும்புவோர் காதலியரின் கை விரல்களில் மோதிரம் மாட்டி அழகு பார்ப்பார்கள். ஆனால் ரன்பீரோ வித்தியாசமாக காதலிக்காக அழகான வைரத் தோடு வாங்கியுள்ளாராம்.

ரோஜாப்பூ...பழைய பேஷன்
இந்த வைரைத் தோட்டை தனது பிறந்த நாளன்று காத்ரீனா காதில் மாட்டி தனது திருமண விருப்பத்தையும் சொல்லப் போகிறாராம் ரன்பீர்.

பெற்றோர் எதிர்ப்பு....
காத்ரினாவைத் திருமணம் செய்து கொள்ள ரன்பீர் விரும்பினாலும் கூட அவரது வீட்டிலிருந்து இன்னும் முழுமையான சம்மதம் வரவில்லையாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
இருப்பினும் தனது பெற்றோரையும், குடும்பத்தினரையும் ரன்பீர் சமாதானப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. எனவேதான் காத்ரீனாவிடம் தனது திருமண விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க முடிவு செய்துள்ளார் ரன்பீர் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











