Arasan: சிம்புக்கு ஜோடி சமந்தா.. வெற்றிமாறனின் அரசன் படம் பற்றி வெளியான தகவல்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அரசன்' இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகர் சிம்பு முதன் முதலாக வெற்றிமாறனுடன் கூட்டணி வைத்திருக்கும் படம் தான் அரசன். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், வடசென்னை யுனிவர்ஸின் கதைகளுள் ஒன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
சிம்புவின் அரசன்: மதுரையில் ஒரு சாதாரண கபடி வீரனாக இருக்கும் நாயகன், எதிர்பாராத சூழல்களால் சென்னைக்கு வருவதும், அதன் பின் இங்கே அவர் ஒரு டானாக உருவெடுப்பதும் தான் இப்படத்தின் கதை. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்திற்காக சிம்பு, இளமையான தோற்றத்திலும், நடுத்தர வயதானவரின் தோற்றத்திலும் நடிக்கிறார். இளமை தோற்றம் க்ளீன் ஷேவ் செய்தும், நடுத்தர வயது தோற்றத்திறற்கு தாடி மீசையுடனும் சிம்புவின் நியூ லுக் போட்டோஸ் இணையத்தில் வெளியானது.

விஜய் சேதுபதி: இந்த படத்தின் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கமிட்டாகி உள்ளார். இதுகுறித்து விழா ஒன்றில் பேசிய விஜய்சேதுபதி, அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது. ஒரு கதாபாத்திரத்தை எழுதும்போது, வெற்றிமாறன் சாருக்கு நான் நியாபகம் வந்ததாக சொன்னார். அதை என்னிடம் சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டேன் என்றார்.
சிம்புவுடன் சமந்தா: இந்நிலையில், இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, இயக்குநர் சமந்தாவுடன் பேச்சு வாத்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதுவரை சமந்தா சிம்புடன் சேர்ந்து நடந்த படத்திலும் நடித்தது இல்லை. இதனால், இந்த ஜோடி இணைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. எந்தளவிற்கு விரைவாக இப்படத்தின் ஷூட்டிங்கை முடிக்க முடியுமோ அந்தளவிற்கு விரைவாக படப்பிடிப்பை முடித்து கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடபடக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











