ஷாருக்கானுக்கு மீண்டும் கொக்கிப் போடும் சஞ்சய் லீலா பன்சாலி.. அப்போ அட்லி கூட்டணி என்ன ஆகும்?

மும்பை: 20 ஆண்டுகளுக்கு முன்பு ஷாருக்கானை இயக்கிய பிரம்மாண்ட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீண்டும் ஒரு முறை ஷாருக்கானை இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஜீரோ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து புதிதாக எந்தவொரு படத்திலும் நடிகர் ஷாருக்கான் ஒப்பந்தமாகாமல் இருந்தார்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வார் படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் எனும் படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான்.

மொய்க்கும் இயக்குநர்கள்

மொய்க்கும் இயக்குநர்கள்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக எந்தவொரு புதிய படத்தையும் ரிலீஸ் செய்யவில்லை. 2018ம் ஆண்டு வெளியான ஜீரோ படத்தின் தோல்வியை தொடர்ந்து நல்ல திரைக்கதையில் மட்டுமே நடிக்க வேண்டும் என ஏகப்பட்ட இயக்குநர்களிடம் கதை கேட்கத் தொடங்கினார். தற்போது ஷாருக்கானை இயக்க பல இயக்குநர்கள் தொடர்ந்து போட்டி போட்டு வருகின்றனர்.

பதான்

பதான்

இயக்குநர் அட்லி, வெற்றிமாறன் உள்ளிட்ட தமிழ் இயக்குநர்கள் மற்றும் ராஜ்குமார் ஹிரானி, சித்தார்த் ஆனந்த் உள்ளிட்ட பிரபல பாலிவுட் இயக்குநர்கள் என பலரிடமும் கதை கேட்டு வந்த ஷாருக்கான், கடைசியாக ஹிரித்திக் ரோஷனின் வார் படத்தை இயக்கி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவும் பவர்ஃபுல் ரோலில் ஜான் ஆபிரகாமும் நடித்து வருகின்றனர்.

வெயிட்டிங்கில் அட்லி

வெயிட்டிங்கில் அட்லி

பதான் படத்தை முடித்த கையோடு ஷாருக்கான் - அட்லி இணையும் படம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், 3 இடியட்ஸ், பிகே படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானியும் ஷாருக்கானை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், புதிதாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியும் ஷாருக்கானுக்காக புதிய கதை ஒன்றை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேவ்தாஸ்

தேவ்தாஸ்

கடந்த 2002ம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ஷாருக்கானின் தேவ்தாஸ் படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. ஆனால், அதன் பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை. பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் உள்ளிட்ட படங்களிலும் ஷாருக்கானை நடிக்க வைக்க சஞ்சய் லீலா பன்சாலி முயற்சித்தார் என்றும் கால்ஷீட் காரணமாக அந்த கூட்டணி இணையவில்லை என்றும் பாலிவுட்டில் பேச்சுக்கள் அடிப்பட்டன.

நார்வே வரை சைக்கிளில்

நார்வே வரை சைக்கிளில்

நடிகர் ஷாருக்கானுக்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ரியல் ஸ்டோரி ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார் என்றும், காதலுக்காக இந்திய இளைஞர் ஒருவர் நார்வே வரை சைக்கிளிலேயே சென்ற கதையை 'இஸார்' எனும் டைட்டிலில் உருவாக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிக்னல் கொடுப்பாரா ஷாருக்கான்

சிக்னல் கொடுப்பாரா ஷாருக்கான்

தேவ்தாஸ் படத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக ஷாருக்கானை இயக்க வேண்டும் என நினைத்து வரும் சஞ்சய் லீலா பன்சாலி இப்படியொரு கதையுடன் நடிகர் ஷாருக்கானை தற்போது அணுகியுள்ள நிலையில், இந்த முறையாவது சஞ்சய் லீலா பன்சாலி படத்திற்கு ஓகே சொல்வாரா ஷாருக்கான் என பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அட்லி படம் எப்போ

அட்லி படம் எப்போ

ஒருவேளை ஷாருக்கான் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் படம் ஒப்பந்தம் செய்யப்பட்டால், இயக்குநர் அட்லி மேலும் சில காலம் வெயிட் செய்ய வேண்டிய நிலையும் உருவாக நேரிடும் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பதான் படத்தின் படப்பிடிப்பு முடியவே தாமதமாகும் என தெரிகிறது. இந்நிலையில், ஷாருக்கான் தனது அடுத்த பட அறிவிப்பை இப்போதைக்கு அறிவிக்க மாட்டார் என்ற பேச்சுக்களும் எழுந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X