இன்னைக்கு தமிழில் பேசுவாரா ஷாரூக்கான்?

ஷாரூக்கான் கொஞ்சம் தட்டுத்தடுமாறி தமிழ் பேசக் கூடியவர்தான். முன்பு கமலுடன் ஹே ராம் படத்தில் நடித்த போதே, சொந்தக் குரலில் தமிழ் டப்பிங் பேசினார் ஷாரூக்.
அதன் பிறகு தான் நடிக்கும் படங்களின் கேரக்டர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்ததாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். ஓம் சாந்தி ஓமில்கூட தமிழில் சில வார்த்தைகள் பேசுவார் ஷாரூக்.
இப்போது அவர் நடித்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள படத்துக்கே சென்னை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்துள்ளார். பல சத்யராஜ், பெசன்ட் நகர் ரவி உள்பட தமிழ் நடிகர்கள் அந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமிழ் வசனங்களும் நிறைய வருகின்றனவாம் படத்தில்.
கதாநாயகி தீபிகா படுகோனே தமிழ்ப் பெண்ணாக வருகிறார். ஒரு அம்மன் பாட்டு கூட இடம்பெற்றுள்ளதாம்.
சென்னை எக்ஸ்பிரஸ் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் சென்னையிலேயே இருக்கும்படி திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். அந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி இன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தான் நிச்சயம் தமிழில் பேசுவதாகவும், அதற்காகவே தமிழை வேகவேகமாக கற்று வருவதாகவும் ஷாரூக் கூறியிருந்தார். தீபிகா பெங்களூர் பொண்ணு. அவருக்கு தமிழ் ஓரளவு நன்றாகவே தெரியும்.
எப்படியோ.. பப்ளிசிட்டிக்காகத்தான் என்றாலும், தமிழில் பேச வேண்டும் என்ற உணர்வு வேறு மொழியில் கிங் மாதிரி இருக்கும் ஒரு பிரபலத்துக்கு வருவதே நல்ல விஷயம்தானே... அதற்காகவே சென்னை எக்ஸ்பிரஸ் நல்லா ஓடட்டும்!


Click it and Unblock the Notifications











