வேள்பாரி 3 பாகத்துக்கு ஷங்கருக்கு தயாரிப்பாளர் கிடைப்பார்களா?.. எல்லாம் அந்த படத்தின் கையில் தானாம்!

சென்னை: ஆரம்பத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களை கொடுத்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ஷங்கர். நண்பன், 2.0 மற்றும் ஐ உள்ளிட்ட படங்கள் என வரிசையாக அவரது வெற்றி ஃபார்மூலா தடுமாறத் தொடங்கி வெகு காலம் ஆகி விட்டன.

இந்தியன் 2 எடுத்து கம்பேக் கொடுப்பார் என நினைத்த நிலையில், இதுவரை வெளியான படங்களிலியே ரொம்ப வொர்ஸ்ட் படமாக இந்தியன் 2 மாறிவிட்டது. இந்நிலையில், அடுத்ததாக வெளியாக காத்திருக்கும் இந்தியன் 3 படத்தின் மீது ரசிகர்கள் துளியும் நம்பிக்கை இல்லாமல் உள்ளனர்.

Velpaari movie

லைகா நிறுவனம் அதிக பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்ட தவறியது மட்டுமின்றி ஷங்கருக்கு மிகப்பெரிய சரிவை கொடுத்துள்ளது. இந்நிலையில், பாகுபலி ரேஞ்சுக்கு வேள்பாரி படத்தை அதுவும் 3 பாகங்களாக ஷங்கர் இயக்க முடிவு செய்துள்ள நிலையில், அவருக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பார்களா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

மனவேதனையில் ஷங்கர்: இதுவரை எந்தவொரு படத்துக்கும் ஷங்கர் இந்தளவுக்கு கேலிகளையும் கிண்டல்களையும் சந்தித்து இருப்பாரா என்றால் அதற்கு இல்லை என்கிற பதில் தான் வந்திருக்கும். ஐ படம் கூட பல ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. அந்த படத்தின் பாடல்கள் எல்லாமே இன்றளவும் ஹிட் தான். ஆனால், அதற்கும் மேல என இந்தியன் 2 படத்தை ஷங்கர் செய்த நிலையில், தான் இப்படி உச்சகட்டமாக கலாய்க்கப்பட்டு வருகிறார்.

3 பாகங்களாக வேள்பாரி: இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 அடுத்த ஆண்டு வெளியாக காத்திருக்கிறது. ஆனால், அந்த படத்தின் டிரெய்லர் கூட ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. இந்நிலையில், அடுத்ததாக வேள்பாரி படத்தை 3 பாகங்களாக இயக்கப் போவதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஷங்கர் கூறியிருந்தார்.

தயாரிப்பாளர் கிடைப்பாரா?: இந்தியன் 2 படத்தின் தோல்விக்குப் பிறகு இயக்குநர் ஷங்கருக்கு வேள்பாரி படத்தை இயக்க 500 கோடி பட்ஜெட்டுக்கும் மேல செலவு செய்ய எந்த தயாரிப்பாளர் தயாராக வருவார் என்கிற கேள்விகள் சினிமா வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. லைகா நிறுவனம் 250 கோடி பட்ஜெட்டை இந்தியன் 2 படம் உருவாக்க செலவு செய்த நிலையில், 4 நாட்களில் 70 முதல் 75 கோடி வசூல் தான் இந்தியன் 2 படமே பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், வேள்பாரி படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம் தான் என்கின்றனர்.

Velpaari movie

கேம் சேஞ்சர் கையில்: ஹீரோக்கள் ஒரு படத்தில் தோல்வியை தழுவினால் மீண்டும் அடுத்த படத்தில் எழுந்து வருவது போல இயக்குநர் ஷங்கரும் மீண்டும் எழுந்து வருவார். என்றும் கேம் சேஞ்சர் படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமையும் என்கின்றனர். ராம்சரண் ரசிகர்கள் டோலிவுட்டில் நிச்சயம் படத்தை மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வைத்து விடுவார்கள். அந்த படம் வெற்றிப் பெற்றால், கண்டிப்பாக தெலுங்கு மற்றும் இந்தியில் இருந்து வேள்பாரி படம் தயாரிக்க ஷங்கருக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பார்கள் என்பது உறுதி என்கின்றனர். ஆனால், கேம் சேஞ்சர் படம் சொதப்பினால் தான் நிலைமை மோசமடையும் என்கிற பேச்சுகளும் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X