கன்னட பட ரீமேக்கில் நடிக்கவுள்ளாரா ஷாந்தனு!?

சென்னை: தமிழில் பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன் ஷாந்தனு பாக்யராஜ்.

ஷாந்தனு தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

கன்னட படத்தின் ரீமேக்கில் ஷாந்தனு நடிக்கவுள்ளார் என்ற செய்தி சினிமா வட்டாரங்களிடையே பேசப்பட்டு வருகிறது.

தனக்கான இடம்

தனக்கான இடம்

பாக்யராஜின் மகனான ஷாந்தனு தமிழ் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை பெற முயற்சித்து வருகிறார். பெரிய வெற்றிகளை தேடி ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடிக்க முயற்சித்து கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் ஷாந்தனு.

பாராட்டுகளை பெற்றார்

பாராட்டுகளை பெற்றார்

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பது வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமையும். அதை கடந்த ஆண்டு வெளியான பாவ கதைகள் ( தங்கம்) படத்தில் சரிவர செய்திருந்தார் ஷாந்தனு. அவரது முந்தைய படங்களை விட பாவ கதைகள் படத்தில் பாராட்டுகளை பெற்றார் ஷாந்தனு.

Recommended Video

Kiki Shanthanu sudden shocking Post | வாழ்க்கைல முக்கியமான சொத்து உறவுகள் தான்
சிறிய வேடம்

சிறிய வேடம்

அதை தொடர்ந்து இந்த வருடம் வெளியான மாஸ்டர் படத்தில் ஷாந்தனு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஷாந்தனு நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ்,

கசட தபற, இராவண கோட்டம் ஆகிய படங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Birbal திரைப்படம்

Birbal திரைப்படம்

இந்நிலையில் ஷாந்தனு 2019ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி ஹிட் அடித்த "Birbal" படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. மதியாளன் என இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளிவரும் என சினிமா வட்டாரங்கள் இடையில் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X