பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில்டு கார்டு என்ட்ரி இந்த நடிகையா?

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil: Sanam Shetty: சனம் பிக் பாஸ்-3 யின் அடுத்த போட்டியாளராக நுழைகிறார்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டிற்கு ஒயில்டு கார்டு என்ட்ரியாக இவர் வருவாரோ?

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷன் நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய அன்று சனம் ஷெட்டி பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார். அவரை அடிக்கடி அருகில் காட்டியதை பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.

ஏற்கனவே பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார் என்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் ஒயில்டு கார்டு மூலம் யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 நிஜ காதல்

நிஜ காதல்

தமிழ் பிக் பாஸ் வீட்டில் காதலை உருவாக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள். கவினை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ். இந்நிலையில் நிஜ காதல் ஜோடி பிக் பாஸ் வீட்டில் தங்கினாலும் தங்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. அதற்கு காரணம் சனம் ஷெட்டியின் பேட்டி தான்.

 சனம் ஷெட்டி

சனம் ஷெட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக என்னை அணுகினார்கள். ஆனால் இறுதி பட்டியலில் என் பெயர் இல்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சர்பிரைஸ் நிறைந்தது என்று அவர் பொடி வைத்து பேசியதை பார்த்தால் ஒயில்டு கார்டு மூலம் அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறாரோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

போலி

போலி

சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் இரண்டு விஷயம் நடக்கும். ஒன்று பிக் பாஸ் கவினை விட்டுவிட்டு தர்ஷன்-சனம் காதலை காட்டலாம். இரண்டு மீரா மிதுன் பற்றி தெரிந்தவர் சனம். அதனால் மீரா சனம் முன்பு ரீல் சுற்ற முடியாது. மீரா மிதுனிடம் இருந்து பறிக்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டம் சனம் ஷெட்டிக்கு தான் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆலியா மானசா

ஆலியா மானசா

ஒயில்டு கார்டு மூலம் பவர் ஸ்டார் சீனிவாசன் வருகிறார், செம்பா ஆலியா மானசா வருகிறார் என்ற பேச்சும் உள்ளது. பிக் பாஸ் என்றாலே பவரின் பெயர் அடிபடுவது வழக்கமாகிவிட்டது. சனம் வந்தால் காதலை உருவாக்கி, அத்துவிட்டு மீண்டும் உருவாக்கும் வேலை மிச்சம். பிக் பாஸ் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X