பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து முதலில் வெளியேறப் போவது யார், ஏன் தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து யார் முதலில் வெளியேறப் போகிறார்கள் என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டனர்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஒரு வழியாக துவங்கிவிட்டது. சித்தப்பு சரவணன் பொன்னம்பலம் போன்று கலாச்சார காவலராக மாறி டார்ச்சர் செய்வார் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
முதல் சீசனுக்கு ஒரு காயத்ரி ரகுராம், இரண்டாவது சீசனுக்கு மும்தாஜ், மூன்றாவது சீசனுக்கு வனிதா விஜயகுமார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வில்லி
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் வனிதா விஜயகுமாரால் செம என்டர்டெயின்மென்ட் இருக்கு. இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டின் வில்லியே அவர் தான் என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள். அவர் வில்லியா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வனிதா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் எந்த போட்டியாளரையும் எலிமினேட் செய்ய மாட்டார்கள். இரண்டாவது வாரத்தில் தான் எலிமினேஷன் ஆரம்பிக்கும். ஆக பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வனிதா விஜயகுமார் தான் எலிமினேட் ஆவார் என்று சிலரும், அவரை வைத்து தான் யாவாரமே நடத்தப் போகிறார்கள் அதனால் அவர் வெளியே செல்ல மாட்டார் என்று சிலரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வழக்கு
வினிதாவலாம் ரெண்டு வாரத்துலயே பத்தி விட்டுடுவான் விஜய் டிவிக்காரன்... அதுக்கு மேல விட்டா வீடு என்னுதுன்னு கேஸ் போட்டுடும்... என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். வீடு, கேஸ் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
வம்பு
பிக் பாஸ் 3 வீட்டில் காயத்ரி ரகுராமுக்கு பதில் வனிதா விஜயகுமாராம். பிக் பாஸ் வீட்டில் சர்ச்சையை கிளப்பி டிஆர்பியை கண்டமேனிக்கு ஏற்றிவிடப் போகிறவர் வனிதா விஜயகுமார் என்றே அனைவரும் நம்புகிறார்கள். யார் கண்டது, எதிர்பார்க்காத யாராவது சர்ச்சையை கிளப்பி நம்மை எல்லாம் வியக்க வைக்கப் போகிறார். வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள், அது தொடர்பாக அவர் அளித்த பேட்டிகளை பார்த்துவிட்டு தான் நெட்டிசன்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். தற்போது கூட அவர் முன்பு அளித்த பேட்டி வீடியோக்களை தேடிப் பிடித்து ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











