இன்று 2 படங்கள் ரிலீஸ்: பாலிவுட்டில் போராடும் ஸ்ருதி சோபிப்பாரா?

By Siva

மும்பை: ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ள டி டே மற்றும் ராமையா வஸ்தாவய்யா ஆகிய 2 இந்தி படங்கள் இன்று ரிலீஸாகியுள்ளன. பாலிவுட்டில் இதுவரை சோபிக்காத ஸ்ருதிக்கு இந்த படங்களாவது கை கொடுக்குமா என்று பார்ப்போம்.

ஸ்ருதி ஆமீர் கானின் உறவினர் இம்ரான் கானுடன் சேர்ந்து லக் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் லக் அவருக்கு லக்கியாக அமையவில்லை. இதையடுத்து தில் தோ பச்சா ஹை ஜி படத்தில் நடித்தார். அதுவும் ஊத்திக் கொண்டது.

இந்நிலையில் தான் அவர் நடித்துள்ள டி டே மற்றும் ராமையா வஸ்தாவய்யா ஆகிய இரண்டு படங்கள் இன்று ரிலீஸாகியுள்ளன.

டி டே

டி டே

டி டே படத்தில் ஸ்ருதி பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். அவர் அர்ஜுன் ராம்பலுடன் சேர்ந்து நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார்.

கமல் தந்த தழும்பு

கமல் தந்த தழும்பு

டி டே படத்தில் ஸ்ருதி கன்னத்தில் பெரிய தழும்பு இருக்கும். அந்த தழும்பை செட் பண்ண அப்பா கமல் தான் உதவி செய்துள்ளார்.

ஃபீல் பண்ண வைக்கிறார்

ஃபீல் பண்ண வைக்கிறார்

டி டே படத்தில் ஸ்ருதியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதில் வரும் இன்னொரு நாயகி ஹூமாவை விட ஸ்ருதி நடிப்பில் ஜொலித்திருக்கிறார்.

ராமையா வஸ்தாவய்யா

ராமையா வஸ்தாவய்யா

பிரபுதேவா இயக்கத்தில் ஸ்ருதி நடித்துள்ள படமான ராமையா வஸ்தாவய்யாவும் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தில் ஜாலியான பெண்ணாக நடித்துள்ளார் ஸ்ருதி. ஆனால் டி டேவுடன் ஒப்பிடுகையில் இந்த படத்தில் ஸ்ருதியின் நடிப்பு சுமார் தான் என்று கூறப்படுகிறது.

சோபிப்பாரா?

சோபிப்பாரா?

இதுவரை பாலிவுட்டில் சோபிக்காத ஸ்ருதிக்கு டி டே மற்றும் ராமையா வஸ்தாவய்யா ஆகிய படங்களாவது கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X