அந்த பெரிய பண்டிகையை டார்கெட் செய்யும் சிம்புவின் மாநாடு.. ஆனால், இப்படியொரு சிக்கல் இருக்கிறதே?

சென்னை: நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 9) உடன் முடிவடைகிறது.

மேலும், மாநாடு படத்தை ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மங்காத்தாவை விட

மங்காத்தாவை விட

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படம் தல அஜித்தின் மங்காத்தா தான். அந்த படத்தை விட சிலம்பரசனின் மாநாடு படம் பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈஸ்வரன் படம் சிம்புவுக்கு நல்ல கம்பேக் கொடுக்காத நிலையில், மாநாடு அதனை பூர்த்தி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமையுடன்

வெள்ளிக்கிழமையுடன்

வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 9ம் தேதியுடன் மாநாடு படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே படத்தின் டப்பிங் பணிகள் ஒரு பக்கம் முழுமை அடைந்து வரும் நிலையில், இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு தரப்பு முயற்சித்து வருகிறது.

சுதந்திர தினம்

சுதந்திர தினம்

ரம்ஜானை டார்கெட் செய்த மாநாடு திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டதால் தள்ளிப் போனது. சுதந்திர தினத்துக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது பண்டிகை நாட்களை டார்கெட் செய்து ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆயுத பூஜை

ஆயுத பூஜை

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மாநாடு திரைப்படம் இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகை நாட்களை டார்கெட் செய்து வெளியாகும் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த மாதம் திரையரங்குகள் திறந்தாலும் கூட மக்கள் தியேட்டருக்கு வருவார்களா? என்பது சந்தேகம் தான்.

தீபாவளிக்கு தள்ளிப் போகுமா

தீபாவளிக்கு தள்ளிப் போகுமா

ஏற்கனவே தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை, ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் என மூன்று பெரிய படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், சிலம்பரசனின் மாநாடு அந்த போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்பதால், ஆயுத பூஜைக்கே ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் படக்குழு இருக்கிறது.

Recommended Video

மாநாடு படம் அந்த படத்தின் ரீமேக் இல்லை.. அடித்து சொல்லும் படக்குழு.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
கொரோனா மூன்றாவது அலை

கொரோனா மூன்றாவது அலை

இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் கொரோனா மூன்றாம் அலை ஆரம்பமாகி செப்டம்பரில் உச்சம் அடையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து இருப்பதால், இந்த ஆண்டு தீபாவளிக்கு கூட எந்தவொரு திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாவது சந்தேகம் தான் என்றும் கருத்துக்கள் பரவி வருகின்றன. எல்லாம் கொரோனா தேவி கையில் தான் உள்ளது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X