»   »  காக்கிச்சட்டை: சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா கெமிஸ்ட்ரி மீண்டும் கைகொடுக்குமா?

காக்கிச்சட்டை: சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா கெமிஸ்ட்ரி மீண்டும் கைகொடுக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனுக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பெரிதாக சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்திராதவர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் அவர் முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் காக்கிச் சட்டை. தனுஷ் தயாரித்துள்ள இந்த படம் வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை அடுத்து காக்கிச் சட்டை படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஸ்ரீதிவ்யா.

மதிமாறன்

மதிமாறன்

காக்கிச் சட்டையில் கம்பீரமாக வரும் சிவகார்த்திகேயனின் பெயர் மதிமாறன். காக்கிச் சட்டை சிவகார்த்திகேயனுக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கெத்து

கெத்து

சிவகார்த்திகேயன் காக்கி சீருடையில் கொத்தாகத் தான் உள்ளார். அவர் காமெடி போலீஸா இல்லை சீரியஸ் போலீஸா என்பது தான் தெரியவில்லை.

மாற்றம்

மாற்றம்

முதலில் இந்த படத்திற்கு டாணா என்று பெயர் வைத்தார்கள். பின்னர் அதை காக்கிச் சட்டை என்று மாற்றினர். அதே போன்று முதலில் அமலா பால் தான் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனார். அவர் படத்தில் இருந்து வெளியேற அந்த வாய்ப்பு ஸ்ரீதிவ்யாவுக்கு கிடைத்தது.

பொங்கல்

பொங்கல்

காக்கிச் சட்டை படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ஐ உள்ளிட்ட பல படங்கள் பொங்கலுக்கு ரிலீஸானதால் காக்கிச் சட்டையின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

English summary
Sivakarthikeyan's Kaaki Chattai will hit the screens on february 27th. Will this movie take him to a next level? Lets wait and see.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil