Siva karthikeyan:சட்டையை மாத்தும் சிவ கார்த்திகேயன் லுக்கை மாத்துவாரா?

சென்னை: நடிகர் சிவ கார்த்திகேயன் தனக்கு இருக்கும் பிரச்னைக்கு டபுள் டபுள் படங்களா நடித்ததாக வேண்டிய கட்டாயத்தில் இருக்காராம்.

இப்போது ஒரு படம் நடித்துக்கொண்டு இருக்கும் நிலையில், இன்னொரு படத்துக்கான ஸ்கிரிப்ட் விக்னேஷ் சிவன் கையில்.

ஆனால் ,விக்னேஷ் சிவன் நயனோடு சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் ஷூட்டிங் மும்பையில் நடந்ததால், அங்கே போய் ஸ்கிரிப்ட் எழுத உள்ளதாக முதலில் சொல்லி சென்றாராம்.

வெளி நாடுகளில்

வெளி நாடுகளில்

நயன்தாராவோடு வெளி நாடுகளில் விக்னேஷ் சிவன் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருப்பதில் இன்னும் படத்துக்கான ஸ்கிரிப்ட் ரெடியாகவில்லை. இதனால் பெரும் வருத்தத்தில் இருக்கும் சிவ கார்த்திகேயன்....ஒன்றுமே செய்ய முடியாமல் தவிக்கிறாராம். லைக்கா நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க உள்ள நிலையில் ,அவர்களே ஸ்கிரிப்ட் ரெடியாகவில்லை என்று எந்த கேள்வியும் கேட்காத நிலையில் தான் மட்டும் என்ன செய்துவிட முடியும் என்று கோபத்தை தனக்குள் புதைத்து விட்டார் சிவா.

ரெடிதான் ஸ்கிரிப்ட்

ரெடிதான் ஸ்கிரிப்ட்

உங்களால்தான் ஒன்னும் கேட்க முடியலை... நாங்களாவது விக்னேஷ் சிவன்கிட்ட பேசறோம்னு சொல்லி, விக்னேஷிடம் கேட்டால், யார் சொன்னது ஸ்கிரிப்ட் ரெடிதான்.. தயாரிப்பாளர் தரப்பில்தான் லேட்டாகுதுன்னு அசால்ட்டா சொல்றாராம். சிவ கார்த்திகேயன் யார் சொல்றதை நம்பறதுன்னு அட சீன்னு விட்டுட்டாராம். அடி மனசில் விஜய் சேதுபதிக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணியது போல . தனக்கும் அருமையான ஸ்கிரிப்ட் தயார் பண்ணுவார்னு ஒத்துக்கிட்டோம். பொறுத்திருப்போம்னு ஆறுதலும் சொல்லிக்கறார். ஆற்றாமையையும் வெளிப்படுத்திக்கறார்.

மாற்றிக்க முடியாதா?

மாற்றிக்க முடியாதா?

அது சரி..பெண்களுக்கு பிடித்த கதாநாயகன் என்று சிவாவுக்கு ஒரு மவுசு இருக்கு.அதாவது சாக்லேட் பாய் என்கிற அர்த்தத்தில் இல்லை... நகைச்சுவை நடிப்பு, அதை விட டிவியில் பிரபலமான முகம் என்கிற வகையில்தான். அப்படிப்பட்ட சிவா படத்துக்கு படம் சட்டையை தான் மாத்தறார். லுக்கை மாத்த மாட்டேங்கிறாரே எதனால்?

இவர் லுக்கை

இவர் லுக்கை

நல்ல இயக்குநரிடம் சிவ கார்த்திகேயன் சிக்கி அவர் தயை கூர்ந்து இவர் லுக்கை மாற்றினால் ரொம்ப புண்ணியமாப் போகும்னு பல பெண் ரசிகைகளும் கோரிக்கை வைக்கறாங்க. டிவியில் பார்த்த காலத்திலிருந்து அதே முகத்தை பார்க்கணும்னா எப்படிங்க... வயசுதான் கொஞ்சம் ஏறிடுச்சு...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X