பிரபல OTT நிறுவனத்தின் வெப் தொடரில் நடிக்கவுள்ளாரா SJ சூர்யா!?
சென்னை: சில படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் ரசிகர்களுக்கு விருப்பமான இயக்குனராக SJ சூர்யா இருந்து வருகிறார்.
முன்னர் ஹீரோவாக நடித்து வந்த SJ சூர்யா சமீப காலமாக வில்லன் கதாபாத்திரத்திலும் அசத்தி வருகிறார்.
தற்போது SJ சூர்யா பிரபல OTT நிறுவனத்தின் வெப் தொடரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரசிகர்களை ஈர்த்தார்
முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படத்திலும், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்திலும் SJ சூர்யா வில்லனாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார். அதன் விளைவாக அடுத்தடுத்த படவாய்ப்புகள் வர தொடங்கின.

அசத்தலான நடிப்பு
இந்த ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில், SJ சூர்யா நடிப்பில் வெளியான படம் நெஞ்சம் மறப்பதில்லை. நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் வெளியான இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. SJ சூர்யாவின் அசத்தலான நடிப்பு அப்லாஸ்களை அள்ளியது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இது மட்டுமன்றி SJ சூர்யா நடிப்பில் மாநாடு, டான், பொம்மை, இறவாகாலம், கடமையை செய் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. நம்பிக்கை அளிக்கும் SJ சூர்யாவின் இந்த லைன் அப் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வெப் தொடர்
இதையடுத்து SJ சூர்யா கொலைகாரன் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரியு லூயிஸ் இயக்கத்தில் த்ரில்லர் கதைகளத்தை கொண்ட ஒரு வெப் தொடரில் நடிக்கவுள்ளதாக பேசப்படுகிறது. இந்த வெப் தொடர் அமேசான் ப்ரைம்-ல் வெளிவரும் என தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











