Just In
- 38 min ago
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
- 1 hr ago
பிகினி போஸ் நல்லாதான் இருக்கு.. நடிப்புத்தான்? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
உடம்பு சரியில்லை.. சீக்கிரம் உங்களை நேரில் வந்து பார்க்குறேன்.. ரசிகர்களுக்காக வீடியோ போட்ட ஆரி!
- 2 hrs ago
இனிமேலாவது மனுஷனா மாறுப்பா.. மிருக குணத்தை விடு.. டிவிட்டரில் பாலாஜியை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- Education
டான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை!
- Sports
அழுத்தம் கொடுத்த "சிலர்".. "அதிரடி மன்னன்" கேதார் ஜாதவை நீக்க தயக்கம் காட்டிய தோனி.. பரபர நிமிடங்கள்
- News
பாமக வந்தால் திமுக கூட்டணிக்கு நிச்சயம் குட்பைதான்... திருமாவளவன் திட்டவட்டம்
- Automobiles
டுவிட்டரை கையாள பணியாளர்களை நியமிக்கும் பிரபல கார் நிறுவனம்... எதற்காக இந்த பணியமர்வு தெரிஞ்சா வியந்துருவீங்க!
- Finance
கிடு கிடு ஏற்றத்தில் தங்கம்.. போகிற போக்கில் நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே..!
- Lifestyle
இந்த நேரத்தில் உடலுறவு வைச்சுகிட்டா கர்ப்பமாவதற்கு 99% வாய்ப்பிருக்காம் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மும்பை ரோட்டில் ஆட்டோ ஓட்டிய நடிகர்: யார்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க

மும்பை: ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் இந்தியாவுக்கு வந்த இடத்தில் ஆட்டோ ஓட்டியுள்ளார், தாஜ்மஹால் சென்றுள்ளார், கங்கா ஆரத்தி எடுத்துள்ளார்.
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆவண படம் ஒன்றில் நடிக்க இந்தியா வந்தார். மும்பை வந்த வில் ஸ்மித்துக்கு பாலிவுட் பிரபலங்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு பார்ட்டி கொடுத்தனர்.
[விஜய்யின் பேச்சால் அப்செட் ஆனாரா கலாநிதி மாறன்?]
|
மும்பை
வில் ஸ்மித் மும்பை தெருக்களில் ஆட்டோ ஓட்டினார். அவரை அடையாளம் கண்ட சிலர் அவரின் பெயரை சொல்லி அழைத்தனர். அவர் ஆட்டோ ஓட்டியபோது எடுத்த வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

பாலிவுட்
ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து பாலிவுட் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் வில் ஸ்மித். இது குறித்து அவர் கூறியதாவது, பாலிவுட் டான்ஸ் ஆட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யாவை சந்தித்து பேசினேன். அப்போது இருவரும் சேர்ந்து நடிப்பது குறித்து பேசினோம். ஆனால் அது நடக்கவில்லை. அவருடன் நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.
|
செல்ஃபி
ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார் வில் ஸ்மித். அங்கு ஹீரோ டைகர் ஷ்ராஃப், ஹீரோயின் அனன்யா பாண்டே உள்ளிட்டோர் அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கும் வில் ஸ்மித்தை சந்தித்து பேசி செல்ஃபி எடுத்துள்ளார். ரன்வீரும், பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹாரும் சேர்ந்து வில் ஸ்மித்துக்கு இந்திய நடனத்தை கற்றுக் கொடுத்துள்ளனர்.
|
தாஜ்மஹால்
ஆக்ராவுக்கு சென்ற வில் ஸ்மித் தாஜ் மஹாலை சுற்றிப் பார்த்துள்ளார். அப்போது அவர் ஷாருக்கானின் பிரபலமான போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
கோவில்
வில் ஸ்மித் ஹரித்வாருக்கு சென்ற இடத்தில் கடவுளுக்கு ஆர்த்தி எடுத்துள்ளார். அவர் கழுத்தில் மாலை அணிந்து ஆரத்தி எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சில குசும்புக்காரர்களோ அவர் இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக வதந்தியை பரப்பியுள்ளனர்.