90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்.. மீண்டும் வருகிறார்கள் பேட் பாய்ஸ்!
சென்னை: வில்ஸ்மித், மார்டின் லாரன்ஸ் நடிப்பில் பேட் பாய்ஸ் படத்தின் 3ம் பாகம் பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் எனும் தலைப்பில் வரும் ஜனவரி 17, 2020ல் வெளியாகிறது.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் படமான பேட் பாய்ஸ் படத்தின் அசத்தலான தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.
இன்னும் இவங்களுக்கு வயசாகாதா என சொல்லும் அளவுக்கு வில் ஸ்மித் மற்றும் மார்டின் லாரன்ஸ் ஆக்ஷனில் அசத்தியுள்ளனர்.

பேட் பாய்ஸ்
ஜியார்ஜ் காலியோ இயக்கத்தில் 1995ம் ஆண்டு பேட் பாய்ஸின் முதல் பாகம் வெளியானது. வில் ஸ்மித் அப்டிங்கற ஹாலிவுட் ஹீரோ இருக்கிறார் என்பதையே பேட் பாய்ஸ் படம் தான் உலகற்கு தெரியப்படுத்தியது. 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஆக்ஷன் காமெடி படமாக பேட் பாய்ஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பாகம்
பேட் பாய்ஸ் முதல் பாகம் வந்து 8 ஆண்டுகள் கழித்து 2003ம் ஆண்டு பேட் பாய்ஸ் 2 படம் வெளியானது. மைக்கேல் பே இயக்கிய இந்த படத்திலும், வில் ஸ்மித், மார்டின் லாரன்ஸ் ஜோடி தங்களுக்கே உரிய பாணியில் அசத்தினர்.

ரஷ் ஹவர்
ஜாக்கி சானின் ரஷ் ஹவர் படத்திற்கே வில் ஸ்மித்தின் பேட் பாய்ஸ் படம் தான் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம். கிட்டத்தட்ட இரண்டு கதைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒரு போலீஸ் அதிகாரி காமெடியுடன் ஆக்ஷன் செய்ய, மற்றொரு அதிகாரி ஹீரோவாக எதிரிகளை வீழ்த்தி கெத்து காட்டுவார்.
ஃபார் லைஃப்
பேட் பாய்ஸ் 2 படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகும் நிலையில், பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை அதில் எல் அர்பி மற்றும் பிலால் ஃபல்லாஹ் இணைந்து இயக்கியுள்ளனர். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வரும் ஜனவரி 17,2020ல் பொங்கல் பண்டிகை ரிலீசாக பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் ரிலீசாகிறது.


Click it and Unblock the Notifications











