இங்கேயும் பாக்கி இருக்கு.. “கொஞ்சம் ஸ்மித்தை இங்க அனுப்புங்க“.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற வில் ஸ்மித், நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை விழா மேடையில் அறைந்த சம்பவம் பரவலாக பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கிங் ரிச்சர்ட் படத்திற்காக வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் தலை முடி குறித்து கிண்டலடித்து பேசினார் கிறிஸ் ராக். இது பார்வையாளர்கள் வரிசையில் சிரிப்பலை எழுந்தது.

திடீரென்று மேடைக்கு வந்த வில் ஸ்மித், தன்னை பாராட்ட வருவதாகவே கிறிஸ் ராக் கருதிய நிலையில், ஓங்கி அறை விட்டு விட்டு மீண்டும் தனது மனைவியுடன் அமர்ந்து கொண்டார்.

செம மீம்ஸ்

செம மீம்ஸ்

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித் நடந்து கொண்ட விதம் குறித்து இணையத்தில் பலவிதமான கருத்துக்கள் பரவி வரும் நிலையில், நெட்டிசன்ஸ் பிரபலங்களை வைத்து மீம்சை கிரியேட் செய்து தெறிக்க விட்டு வருகின்றனர். ஒரு நெட்டிசன் பயில்வான் ரங்கநாதனை வில் ஸ்மித் அடிப்பது போல மீம்சை போட்டு ஏற்கனவே வில் ஸ்மித்துக்கும் அவன் பொண்டாட்டிக்கும் என பதிவிட்டுள்ளார்.

வாய திருப்பிட்டீங்களா?

வாய திருப்பிட்டீங்களா?

சினிமா பிரபலங்களை தொடர்ந்து விமர்சித்து வரும் பயில்வான் ரங்கநாதன் மீது ஏகத்திற்கும் கடுப்பில் இருக்கும் நெட்டிசன்ஸ் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, ஆஸ்கர் மேடையில் குடும்பத்தை கிண்டலடிச்சவன் வாய திருப்பிட்டீங்களா? என பயில்வானை கலாய்ப்பது போல ஒரு மீம்சை போட்டுள்ளனர்.

வைரலாகும் மீம்ஸ்

வைரலாகும் மீம்ஸ்

எந்த மீம்ஸானாலும் வடிவேலுவுக்கு அது பக்காவாக பொருந்திவிடும் என்பதால், மீம்ஸ் கிரியேட்டர்கள் அவர் இல்லாமல் எந்த மீம்ஸ்சும் இருக்காது. தற்போதும் அவரை வைத்தே ஒரு மீம்சை உருவாக்கி உள்ளனர்.

இங்கேயும் நிறைய பேருக்கு பாக்கி இருக்கு

இங்கேயும் நிறைய பேருக்கு பாக்கி இருக்கு

உங்கள உருவக் கேலி பண்றவங்கள இப்டி செவுல்லயே போடனும் என்றும், இங்கேயும் நிறைய பேருக்கு பாக்கி இருக்கு, கொஞ்சம் ஸ்மித்தை இங்க அனுப்புங்க என்று நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பிரபலங்களை வைத்தும் மீம்ஸ் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X