அரசியலில் (நுழைந்தால்) புயலைக் கிளப்புவாரா சர்ச்சை நாயகி சோனா?
சென்னை: அரசியலுக்கு வரப் போவதாக கூறியுள்ளார் நடிகை சோனா. அதுவும் 40 வயது ஆனதும் என்ட்ரி கொடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
திரைப்பட வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளைச் சந்தித்தவர் சோனா. அதேபோல அரசியலிலும் இவர் புயலைக் கிளப்புவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
சினிமாவைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது புதிதில்லைதான். ஆனால் அவர்கள் சேரும் கட்சி, அவர்களால் ஏற்படும் பாதிப்புதான் பேசப்படும். எனவே சோனாவின் அரசியல் பிரவேசமும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

வாய்ப்பில்லாத.. அரசியல் ஆசை
சினிமாவில் வாய்ப்பு இல்லாத பிரபல நடிகைகளுக்கு அரசியல் ஆசை பிய்த்துக் கொண்டு கிளம்பியுள்ளது.

சாக்கி சான் கூப்டாக
ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்டாக.. என்பது போல அரசியல் கட்சிகளுக்கு தூதுவிட்டுக் கொண்டுள்ளனர். அப்படியே சந்தடி சாக்கில் எம்பி, எம்எல்ஏ சீட்டுக்கு அடிபோடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

லேட்டஸ்ட் ஆசைக்காரி சோனா
இந்த நடிகைகள் பட்டியலில் இப்போது சேர்ந்திருப்பவர் முன்னாள் கவர்ச்சி நடிகை சோனா.

ரொம்பத் தெளிவான பேச்சு
நாட்டு நடப்பு, அரசியல், பெண்கள் நிலை, பொதுச் சேவை என தெளிவாகப் பேச ஆரம்பித்துள்ளார் அம்மணி.

வயது வந்ததும்
40 வயது ஆனதும் அரசியலில் புகப் போவதாக சோனா கூறியுள்ளார். தற்போது அவருக்கு என்ன வயது என்பது தெரியவில்லை. அவரும் சொல்லவில்லை.
40 வயது ஆகட்டும்.. சோனாவும் அரசியலுக்கு வரட்டும்... இந்த நாடு இன்னும் எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கே!!


Click it and Unblock the Notifications











