சன் பிக்சர்ஸ் ஏன் இப்படி பண்ணுனாங்க...இன்று பீஸ்ட் அறிவிப்பு வருதா ?
சென்னை : பீஸ்ட் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சன் பிக்சர்ஸ் செய்யும் வேலைகள் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இப்படி செய்கிறார்கள், என்ன பிரச்சனை, எதனால் பீஸ்ட் அப்டேட் தர இவ்வளவு தாமதம் செய்கிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், தலைவர் 169 என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ். தீபாவளிக்கு வெளியான ரஜினியின் அண்ணாத்த நல்ல கலெக்ஷன் பார்த்தது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் செம ஹிட் ஆகி உள்ளது. இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பயங்கர எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இதனால் அடுத்து பீஸ்ட் அப்டேட் தான் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சன் பிக்சர்ஸ் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது தொடர்பாகவே ட்வீட் செய்து வருகிறது. ஆனால் நெட்டிசன்களோ பீஸ்ட் அப்டேட் இன்று வருது, நாளை வருது, பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா நடக்காது, பீஸ்ட் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீஸ் என பல தகவல்களை பரவ விட்டு வருகின்றனர்.

இன்று ரிலீஸ் தேதி வருதா
ஏப்ரல் 13 ம் தேதி பீஸ்ட் ரிலீசாக உள்ளது ஏறக்குறைய முடிவாகி விட்டதாம். பீஸ்ட் ரிலீஸ் தேதியை இன்று அல்லது நாளை வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று பீஸ்ட் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியிட அதிக வாய்ப்புள்ளதாம். சன் பிக்சர்ஸும் கிட்டதட்ட இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

சன் பிக்சர்ஸ் ஏன் இப்படி பண்றாங்க
எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசானது முதல் தினமும் அந்த படம் பற்றி ஏதாவது ஒரு ட்வீட்டை மட்டும் தான் சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வந்தது. ஆனால் இன்று காலையில் இருந்து இதுவரை 4 ட்வீட்களை வெளியிட்டு விட்டது. பிற்பகலுக்கு மேல் முக்கிய அறிவிப்பு வெளியிடுவதற்காக தான் சன் பிக்சர்ஸ் காலையிலேயே எதற்கும் துணிந்தவன் படம் பற்றிய ட்வீட்களை காலையிலேயே போட்டு விட்டதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இது தான் விஷயமா
அதே போல் ஆடியோ வெளியீடு இல்லாமல் வேறு ஒரு பிளானை சன் பிக்சர்ஸ் தயார் செய்துள்ளதாம். பீஸ்ட் படத்திற்கான வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் உடனான ஆலோசனையை சன் பிக்சர்ஸ் இன்று நடத்த உள்ளதாம். இந்த ஆலோசனை முடிந்த பிறகு இன்று ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்து அறிவிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











