விஜயின் ஜில்லா ஹிட் ஆயிடுமோ...?!

By Siva

சென்னை: சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ஜில்லா படம் உறுதியாக ஹிட் ஆகிவிடும் போல் இருக்கிறது.

விஜய் படங்களை எத்தனையோ தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ளனர். ஆனால் விஜய்க்கும் ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸுக்கும் ஒரு ராசி உள்ளது. அதாவது இளைய தளபதியும், சௌத்ரியும் சேர்ந்த படங்கள் எல்லாமே ஹிட் தான். அப்படி இருக்கையில் இந்த கூட்டணி தற்போது மீண்டும் சேர்ந்துள்ளது.

நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜில்லா படத்தை தயாரிப்பது வேறு யாருமல்ல சூப்பர் குட் பிலிம்ஸ் தான். அப்படி என்றால் ஜில்லாவும் ஹிட் தானா என்று கேட்கத் தோன்றுகிறது?

பூவே உனக்காக

பூவே உனக்காக

விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த பூவே உனக்காக படம் ஹிட் என்று அனைவருக்கும் தெரியும். அதை தயாரித்தது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்.

துள்ளாத மனமும் துள்ளும்

துள்ளாத மனமும் துள்ளும்

காதலை அழகாகச் சொன்ன துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் விஜய், சிம்ரன் அருமையாக நடித்திருந்தனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ்.

லவ் டுடே

லவ் டுடே

லவ் டுடே படத்தில் காதல் காதல் என்று காதலி பின்னால் சுற்றி தந்தையை இழந்த பிறகு வாழ்க்கையை புரிந்து கொள்வார் விஜய். இதை தயாரித்ததும் ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குடம் பிலிம்ஸே.

ஷாஜகான்

ஷாஜகான்

விஜய் காதலிக்கும் பெண் வேறு ஒருவரை காதலிக்கும் படமான ஷாஜகானை தயாரித்ததும் சூப்பர் குட் பிலிம்ஸ் தான்.

திருப்பாச்சி

திருப்பாச்சி

திருப்பாச்சியில் தங்கையை சந்தோஷப்படுத்த அவளது தோழியின் முடியை நறுக்கி வரச் சென்று மாறாக தோழியின் தாயின் முடியை நறுக்கி வருவார் விஜய். அண்ணன்-தங்கை பாசத்தை சிலிரிக்கும்படி சொன்ன திருப்பாச்சியை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்தது.

அப்போ ஜில்லா?

அப்போ ஜில்லா?

சூப்பர் குட் பிலிம்ஸ், விஜய் இதுவரை சேர்ந்த படங்கள் அனைத்தும் ஹிட். அப்படி என்றால் ஜில்லாவும் ஹிட்டா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X