மறுபடியும் சூர்யா பாடுவாரா.. பயந்து வருதே!

Recommended Video

Review of this week | Action | Sangathamizhan | Vishal | Vijay sethupathi

சென்னை: சூர்யா மீண்டும் பாடல் பாடுவாரா.. இதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்.

சூர்யா ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் வெளியான அஞ்சான் படத்தில் பாடியிருந்தார். அடுத்து மீண்டும் பாட்டுப் பாட ஒரு சான்ஸ் வருகிறது. அதாவது சூர்யா தற்போது நடித்து வரும் படம் சூரரைப் போற்று. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் பட்டையைக் கிளப்பியுள்ளது.

will surya sing again in soorarai pottru

இப்படத்தில் ஒரு ஹிப் ஹாப் பாடல் இருக்கிறதாம். இதில் யார் பாடப் போகிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை சூர்யாவே பாடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. படம் வந்த பிறகுதான் தெரியும். பார்ப்போம்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்துக் கொண்டுள்ளார். இது பழைய செய்தி. அவரது அடுத்த படம் என்ன என்பதுதான் இப்போது லேட்டஸ்ட் டாக். அவரது 65வது படத்தை இயக்கப் போவது மகிழ் திருமேனி என டாக் வந்தது. ஆனால் அது நடக்கவில்லையாம். கதை கேட்டதோடு நின்று விட்டதாம்.

விஜய்யின் அடுத்த படத்தை இயக்க ஏஆர் முருகதாஸ், அட்லீ, வெற்றி மாறன் என நிறையப் பேர் காத்துள்ளனராம். ஆனால் பேரரசு இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என்று விஜய்யின் அப்பா ஆசைப்படுகிறாராம். பேரரசுவும் செமையான கதையுடன் தயாராகவே இருக்கிறாராம்.

அசுரன் என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்து விட்டு அமைதியாக இருக்கிறார் வெற்றி மாறன். ஷாருக் கானை சந்தித்து ஒரு கதையைக் கூறி அவருடன் குட்டி டிஸ்கஸனும் முடித்துள்ளார். அதன் பிறகு டெவலப்மென்ட் இல்லை. அடுத்து ரஜினியிடம் ஒரு கதை சொல்லியுள்ளார். அஜீத்துக்கும் கதை ரெடி. சூர்யாவுக்கும் ரெடி.. விஜய்யிடமும் கதை சொல்லியுள்ளார். இதில் யார் படத்தை அடுத்து வெற்றி மாறன் இயக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதா மாறியுள்ளது. அனேகமாக அவர் சூர்யாவுடன் அடுத்த படத்தில் கை கோர்க்கலாம் என்று சொல்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் டிசம்பர் 20ல் வெளியாகும் என்று ஏற்கனவே சொல்ல்பட்டது. ஆனால் கார்த்தியின் தம்பி படமும் அதே நாளில் வருகிறது. ஜீவா படமும் வருகிறது. ஹீரோ படத்துக்கு இப்போது வழக்கு ரூபத்தில் சிக்கல் வந்துள்ளது. 80 கோடி கடன் பிரச்சினையால் படத்தை வெளியிட தடை வந்துள்ளது. இதையடுத்து சிவகார்த்திகேயன் களத்தில் இறங்கியுள்ளார்.

ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய அவர் 80 கோடியை கேட்டுள்ளார். அதற்குப் பதிலாக அவர்களுக்கு 3 படம் செய்து தர ஒப்புக் கொண்டுள்ளாராம். பெரிய மனசுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X