மே மாதத்துக்குப் பின் சண்டை ஓயுமா... படப்பிடிப்புகள் நடக்குமா?

இதில், பெப்சிக்குப் போட்டியாக புதிய தொழிலாளர் அமைப்பை, தமிழ் சினிமா தொழிலாளர் சங்கத்தை அமைப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
'23 யூனியன்கள் அடங்கிய வலுவான அமைப்பாக பெப்சி இருப்பதால்தானே, இந்த ஆட்டம் போடுகிறார்கள்... போட்டி சங்கத்தை உருவாக்கி அவர்களுக்கு மட்டும் வேலை கொடுக்கிறோம் பார்' என்ற எண்ணம்தான் அவர்களின் இந்த முயற்சிக்குக் காரணம் என்பதை கோடம்பாக்கத்துக்கு குப்பை கொட வந்த குழந்தை நட்சத்திரம் கூட சொல்லிவிடும்.
தற்போது படப்பிடிப்பில் உள்ள தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை 2012ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதிவரை நடத்திக் கொள்ளலாம் என்றும், மே மாதம் 2ம் தேதியில் இருந்து தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் புதிதாக அமைக்கவுள்ள தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பைச் சார்ந்த தொழிலாளர்களை வைத்து மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இது தன்மானப் பிரச்சினை என்பதால் இந்த முடிவுக்கு எல்லாத் தயாரிப்பாளர்களும் தவறாமல் கட்டுப்பட வேண்டும் என்று கறாராக சொல்லியிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எஸ் ஏ சந்திரசேரனின் எதிரணியைச் சேர்ந்த தயாரிப்பாளர் சொன்னது: 'ஆமா... அதற்குள் துப்பாக்கி படப்பிடிப்பு முடிஞ்சிடும்ல!'


Click it and Unblock the Notifications











