கங்கனா ரணாவத்தின் எமர்ஜென்சி படத்திற்கு தடையா? கறார் காட்டும் தெலுங்கானா அரசு!

சென்னை: நடிகை கங்கனாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'எமர்ஜென்சி' இந்தி திரைப்படம் செப்டம்பர் 6ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சீக்கிய அமைப்பினா் கோரிக்கை விடுத்ததை அடுத்து, தெலுங்கனாவில் இப்படத்திற்கு தடைவிதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

கங்கனா ரனாவத் திரைத்துறையில் கடந்த 2006 வாக்கில் என்ட்ரியானவர். இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கங்கனா ரனாவத் பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ராகவா லாரன்சுடன் இணைந்து சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது கங்கனா எமர்ஜென்சி படத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகை கங்கனாவே எழுதி இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வரும் செப்.6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

emergency kangana ranaut telungana

எமர்ஜென்சி: இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகை கங்கனாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் இந்த படத்தை நீங்கள் ரிலீஸ் செய்தால் சர்தார்கள் உங்களை காலணியால் அடிப்பார்கள். நீங்கள் ஏற்கெனவே அறை வாங்கியிருக்கிறீர்கள். நான் ஒரு இந்தியன். நான் என்னுடைய நாட்டில், குறிப்பாக மகாராஷ்டிராவில் உங்களை எங்காவது பார்த்தால், எங்களுடைய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரர்களுடன் உங்களை காலணியால் அடிப்போம் என கொலை மிரட்டல் விடுத்திருந்தனர்.

படத்திற்கு தடையா? இந்நிலையில், எமர்ஜென்சி படத்திற்கு தடை விதிப்பது குறித்து தெலுங்கானா அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில அரசு ஆலோசகா் முகமது அலி சபீா் கூறியுள்ளார். இப்படத்தில் சீக்கியா் மதிப்பைக் குறைக்கும் வகையில் சில காட்சிகள் இருப்பதால், சீக்கிய அமைப்பினா் படத்தை தடை செய்ய கோரியுள்ளனா். அதனை பரிசீலிப்பதாக முதல்வா் ரேவந்த் ரெட்டி வாக்குறுதி அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X