வரும் தீபாவளி தல-தளபதி தீபாவளி?
சென்னை: வரும் தீபாவளி தல-தளபதி தீபாவளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விஜய், அஜீத் படங்கள் பல ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தான் ஒரே நாளில் ரிலீஸானது. பொங்கல் தினத்தன்று விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸாகின.
இதனால் அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தீரன்
விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் தீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

தீபாவளி
தீரன் படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படும் என இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

அஜீத்
அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்குகிறது.

போலீஸ்
கௌதம் படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதற்காக அவர் 8 பேக்ஸ் வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

தல தீபாவளி
கௌதம்-அஜீத் இணையும் படத்தின் படப்பிடிப்பை 5 மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

தல-தளபதி தீபாவளி?
பொங்கல் தல-தளபதி பொங்கலாக அமைந்தது. இந்நிலையில் கௌதம் மேனன் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்தால் வரும் தீபாவளி தல-தளபதி தீபாவளி ஆகும்.


Click it and Unblock the Notifications











