twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓடிடி தளத்தை நாடும் படங்கள்...யாருக்கு லாபம் விநியோகஸ்தருக்கா...தயாரிப்பாளருக்கா

    |

    சென்னை : புதிதாக வெளியிடப்படும் படங்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 30 நாட்களுக்கு பிறகே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என ஏற்கனவே விநியோகஸ்தர்கள் கூறி இருந்தனர்.

    த்ரிஷாவா? நயன்தாராவா ?...சிம்புவுடன் அடுத்து ஜோடி சேர போவது யார் ? த்ரிஷாவா? நயன்தாராவா ?...சிம்புவுடன் அடுத்து ஜோடி சேர போவது யார் ?

    ஆனால் ஹலீதா ஷமீமின் ஏலே படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இதனால் தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் மீண்டும் ஒரு கடுமையான நிபந்தனையை முன்வைத்துள்ளனர். இதன்படி, தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 30 நாட்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

    தயாரிப்பாளரின் உரிமை

    தயாரிப்பாளரின் உரிமை

    இதற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு பிரிவான இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான அணியினர் கூறுகையில், இது தயாரிப்பாளரின் உரிமையை பறிக்கும் செயல். தனது படைப்பை எங்கு வெளியிட வேண்டும் என முடிவு செய்ய தயாரிப்பாளருக்கு உரிமை உண்டு என்றனர்.

     எங்கள் கோரிக்கையில் என்ன தவறு

    எங்கள் கோரிக்கையில் என்ன தவறு

    இதற்கு பதிலளித்துள்ள விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், இந்த முடிவு தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனையை தராது. ஏனெனில் பலரும் தங்கள் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்யவே விரும்புகிறார்கள். இந்த ஆண்டு அண்ணாத்த, வலிமை, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 போன்ற பல பெரிய படங்கள் ரிலீசிற்காக உள்ளன. அதனால் எங்கள் கோரிக்கையால் எந்த பாதிப்பும் இல்லை. ஓடிடி தளங்கள் அனைத்து படத்தையும் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் பல படங்கள் தியேட்டர் ரிலீசை நம்பியே உள்ளன. அனைத்து பெரிய நடிகர்களும் எங்களின் கோரிக்கையை ஏற்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

    தயக்கம் காட்டும் மக்கள்

    தயக்கம் காட்டும் மக்கள்

    தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி கூறுகையில்,சிறிய படங்களை வெளியிட தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் ஒரே வழி ஓடிடி தான். விநியோகஸ்தர்களிடம் ஆதரவு கிடைக்காத போது, பைனான்சியர்களிடம் கடன் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர் என்ன செய்ய முடியும். இன்னும் கொரோனா அச்சத்தில் இருந்து மக்கள் வெளியே வராததால், தியேட்டர்களுக்கு வர தயங்குகிறார்கள். இந்த நிலையில் தயாரிப்பாளர்களின் நிலையை விநியோகஸ்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில படங்கள் தான் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளன.

    தற்போதைய நிலை இல்லாமல் இருந்தால் களத்தில் சந்திப்போம் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கும். ஆனாலும் வரும் நாட்களில் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

    தயாரிப்பாளர்கள் என்ன செய்வார்கள்

    தயாரிப்பாளர்கள் என்ன செய்வார்கள்

    தயாரிப்பாளர் தனஞ்செயன் கோவிந்த் கூறுகையில், இந்த கோரிக்கையை சினிமாவை சார்ந்த அனைத்து தரப்பினர்களும் ஏற்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அதிக படங்கள் ஓடிடி தளத்தை நோக்கி செல்வது திரைத்துறையை பேரழிவை நோக்கி கொண்டு சென்று விடும். அதே சமயம் தயாரிப்பாளர்கள் தாங்கள் போட்ட பணத்தை எடுக்க வேண்டும். லாக்டவுனிற்கு பிறகு அதிக அளவிலான ரசிகர்கள் கிடைத்துள்ளதால் டிஜிட்டல் தளத்தில் அதிக வருமானம் கிடைத்துள்ளது. திரைத்துறைக்கு எது நல்லது என புரிந்து கொண்டு தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் அதன்படி செயல்பட வேண்டும் என்றார்.

    வாய்ப்பை பயன்படுத்துவதில்லை தவறில்லை

    வாய்ப்பை பயன்படுத்துவதில்லை தவறில்லை

    வெற்றி தியேட்டர்ஸ் ராகேஷ் கவுதமன் கூறகையில், தனது தயாரிப்பை எங்கு வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர் முடிவு செய்வதை யாரும் கேள்வி கேட்க முடியாது. தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு சிறிய படங்களை ரிலீஸ் செய்ய ஓடிடி தளத்தில் வாய்ப்பு கிடைப்பதை தடுக்க கூடாது. ஒருவேளை பல்வேறு காரணங்களால் ஒரு படம் ஒரு வாரத்திற்கு மேல் தியேட்டரில் சரியாக ஒடவில்லை என்றால் அவர்கள் மற்றொரு வாய்ப்பை கையில் எடுப்பதில் தவறில்லை என்றார்.

    திரைத்துரையினர் சிலர் கூறுகையில், களத்தில் சந்திப்போம், கபடதாரி போன்ற படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தாலும் தியேட்டரில் கூட்டம் வரவில்லை. காரணம், பெரிய நடிகர்கள் படங்கள் தவிர மற்ற படங்களை பார்க்க தியேட்டருக்கு வர மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களுக்கு இன்னும் அச்ச உணர்வே உள்ளது. அதே சமயம் அதிக படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டால், மக்கள் தியேட்டர் பக்கமே வர மாட்டார்கள் என்கின்றனர்.

    English summary
    As per Tamil Nadu Film Exhibitors Association suggestion, producers should give assurance that their movies will not be screened on OTT platforms before 30 days of its theatrical release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X