twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா மிரட்டலால் சமூக இடைவெளி என்பது நிரந்தரமாகி விடுமோ..? இயக்குனர் விஜய் மில்டன் திடீர் பயம்!

    By
    |

    சென்னை: சமூக இடைவெளி என்பது நிரந்தரமாகி விடுமோ என்று அச்சம் வருகிறது என இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

    தமிழில், ஆட்டோகிராப், காதல், வழக்கு எண் 18/9, உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் விஜய் மில்டன்.

    Recommended Video

    களத்தில் இறங்கிய தளபதி ரசிகர்கள்.. தினக் கூலிகளின் பட்டினியை போக்க மாஸ் நடவடிக்கை! - வீடியோ

    அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படம் மூலம் இயக்குனர் ஆனார். அடுத்து கோலிசோடா, 10 எண்றதுக்குள்ள, கடுகு, கோலிசோடா 2 படங்களை இயக்கினார்.

    வீட்டுக்குள் அம்மாவின் வாசனையை இப்போதும் உணர்கிறேன்...பிரபல நடிகை ஶ்ரீதேவி மகள் உருக்கமான போஸ்ட்!வீட்டுக்குள் அம்மாவின் வாசனையை இப்போதும் உணர்கிறேன்...பிரபல நடிகை ஶ்ரீதேவி மகள் உருக்கமான போஸ்ட்!

    ஊரடங்கு

    ஊரடங்கு

    இப்போது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அடுத்து விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் இயக்க உள்ளார். இந்நிலையில் வேகமாக பரவும் கொரோனாவைத் தடுக்க ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

    எண்ணங்களில்

    எண்ணங்களில்

    இதுதொடர்பாக இயக்குனர் விஜய் மில்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமூக மாற்றம் நம் பிள்ளைகளின் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என அச்சமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சமூக பாதுகாப்புக்காக நாம் தனித்திருப்பதை அதீதமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    சுயநலமே பொதுநலம்

    சுயநலமே பொதுநலம்

    நம் எண்ணங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. தீண்டாமை, குடும்ப பாதுகாப்பு என்ற போர்வையில் நம்முள் இறங்கிவிட்டது. மனிதர்களை, மந்தைகள் போல் கூட்டமாக்கி பூச்சிமருந்து தெளிப்பதையும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விடாமல் கொட்டடியில் அடைப்பதையும் சரிதான் என்று நாம் நினைக்க ஆரம்பித்து விட்டோம்.

    விளைவுகள்

    விளைவுகள்

    ஏற்கனவே கயிறு கட்டியவன், கட்டாதவன், புடுங்கியவன், பிடுங்காதவன் என வட்டம் போட்டுக் கொண்ட நாம், மேலும் சுருங்கி சுயநலமே பொதுநலம் என்றாகிக் கொண்டிருக்கிறோம். சகமனிதர்களை -ஏன் -நண்பர்களை கூட அவ நம்பிக்கையோடு தூரத்தில் வைக்க நேரிட்டு விட்டது. இது, நம் பிள்ளைகளின் மனதில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என அச்சமாக இருக்கிறது.

    நிரந்தரமாகி விடுமோ?

    நிரந்தரமாகி விடுமோ?

    இந்த ஆரவாரமெல்லாம் அடங்கிய பிறகு என்றேனும் எங்கேனும் சாலை ஓரம் நாம் மயங்கிக் கிடந்தால் அப்படியே விட்டு விலகி ஒதுங்கிச் செல்வதுதான் social responsibility என அவர்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறோம். சமூக இடைவெளி என்பது மனதுக்குள் மனிதருக்குள் நிரந்தரமாகி விடுமோ என்று அச்சம் வருகிறது என்று தெரிவித்துள்ளார்

    English summary
    Vijay milton is afraid for, 'Will the social distance become permanent?'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X