விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் இப்படி ஒரு தரமான சம்பவம் காத்திருக்கா ?

சென்னை : கமலின் விக்ரம் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பல சர்ப்ரைஸ்கள் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் ஒன்றும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. ரிலீசிற்கு முன் விக்ரம் படம் பற்றி வெளியாகும் அடுத்தடுத்த தகவல்கள் ரசிகர்களை எதிர்பார்ப்பு மற்றும் உற்சாகத்தின் உச்சியில் கொண்டு வைத்துள்ளது.

விக்ரம் விழாவில் ஸ்டார்கள்

விக்ரம் விழாவில் ஸ்டார்கள்

விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக கமல் எழுதி, பாடிய பத்தல பத்தல பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளது. இந்த விழாவிற்கு ரஜினி, விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யாவுக்கு என்ன ரோல்

சூர்யாவுக்கு என்ன ரோல்

ஏற்கனவே விக்ரம் படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக வெளியாகிய தகவலால் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவே பரபரப்பாகி அதை பற்றி பேச்சுக்களே உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் சூர்யா கேங்ஸ்டர் ரோலில் நடித்திருப்பதாகவும், விக்ரம் படத்தின் க்ளைமாக்ஸ் மற்றும் சூர்யாவின் ரோலுக்கும் கைதி 2 படத்திற்கும் தொடர்பு இருப்பதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் சூர்யாவின் ரோல் என்ன, விக்ரம் படத்தின் கதை என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

அடுத்து யாருடைய படம்

அடுத்து யாருடைய படம்

விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்க போவதாக கூறப்பட்டது. ஆனால் விக்ரம் படத்தின் க்ளைமாக்சில் கைதி 2 படத்தின் கதை கனெக்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்க போகிறாரா, தளபதி 67 படத்தை இயக்க போகிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இப்படி ஒரு சம்பவம் காத்திருக்கா

இப்படி ஒரு சம்பவம் காத்திருக்கா

இதற்கிடையில் லேட்டஸ்ட் தகவலாக, நாளை நடைபெற உள்ள விக்ரம் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி 67 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம். இதனால் இந்த விழாவில் விஜய் நிச்சயம் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. அதுவும் தளபதி 66 லுக்கில் விஜய் கலந்து கொள்ளவார் என்பதால் அவரை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

எத்தனை சர்ப்ரைஸ்ப்பா

எத்தனை சர்ப்ரைஸ்ப்பா

இதே போல் ராஜ்பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படங்களின் அறிவிப்பும் இந்த விழாவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் பல தரமான சம்பவங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X