சீக்கிரமே ஒரு பிரம்மாண்ட நட்சத்திர திருமணம் நடக்கப் போகுதா? பிரபல நடிகர் என்ன சொல்றாருன்னு பாருங்க!

மும்பை: பாலிவுட்டின் அதிரடி நாயகன் டைகர் ஷெராஃப்புக்கும் கிளாமர் குயின் திஷா பதானிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக பாலிவுட் முழுக்க பேச்சுக்கள் சில வருடங்களாகவே உலா வருகின்றன.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் டைகர் ஷெராஃபின் திருமணம் பற்றி பிரபல நடிகரும் டைகர் ஷெராஃபின் தந்தையுமான ஜாக்கி ஷெராஃப் சூப்பரான விஷயத்தை ஓப்பன் செய்துள்ளார்.

31வது பிறந்தநாள்

31வது பிறந்தநாள்

ஆரண்ய காண்டம், பிகில் உள்ளிட்ட தமிழ் படங்களில் வில்லன் நடிகராக நடித்த பிரபல பாலிவுட் வில்லன் நடிகரான ஜாக்கி ஷெராஃப்பின் மகன் தான் டைகர் ஷெராஃப். 2014ம் ஆண்டு வெளியான ஹீரோபன்ட்டி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான டைகர் ஷெராஃப் இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஆக்‌ஷன் ஹீரோ

ஆக்‌ஷன் ஹீரோ

அப்பா வில்லன் நடிகராக மிரட்டிய நிலையில், மகன் டைகர் ஷெராஃப் ஹீரோவாக பாலிவுட்டை கலக்கி வருகிறார். பாகி 1, 2 மற்றும் 3ம் பாகம் படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன. ஃப்ளையிங் ஜாட் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்து அசத்தி உள்ளார். ஹிரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் படத்தில் இரண்டாவது ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

நடிகையுடன் காதல்

நடிகையுடன் காதல்

டோலிவுட் படமான லோஃபர் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமான நடிகை திஷா பதானி எம்.எஸ். தோனி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பாகி 2 படத்தில் டைகர் ஷெராஃப் உடன் இணைந்து நடித்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஆனால், இதுவரை இன்னமும் இவர்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் காதலை அறிவிக்கவில்லை.

திருமணம் எப்போ

திருமணம் எப்போ

டைகர் ஷெராஃப்பின் திருமணம் குறித்து சமீபத்தில் ஜாக்கி ஷெராஃப் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. இப்போதைக்கு என் மகன் சினிமாவை திருமணம் செய்துள்ளான். அதில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறான். ஒரு வேளை சீக்கிரமே திருமணம் செய்து கொள்ளும் ஆசையை தெரிவித்தால், நிச்சயம் எனக்கு சந்தோஷம் தான் எனக் கூறியுள்ள பேட்டி வைரலாகி உள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

படங்களை தாண்டி இருவரும் பல இடங்களுக்கு சேர்ந்து சுற்றி வருவது, அடிக்கடி செல்ஃபி போட்டோக்களை எடுத்து போட்டு தள்ளுவது என மிகவும் நெருக்கமாக பழகி வருகின்றனர். இருவரது ரசிகர்களும் இந்த ரீல் ஜோடி சீக்கிரமே ரியல் ஜோடியாக வேண்டும் பாலிவுட்டில் இன்னொரு பிரம்மாண்ட நட்சத்திர திருமணம் நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

அறிவிப்பாரா

அறிவிப்பாரா

தனது 31வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றாவது நடிகை திஷா பதானிக்கும் தனக்கும் இருக்கும் உறவு குறித்து அதிகாரப்பூர்வமாக டைகர் ஷெராஃப் அறிவிப்பாரா? என ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கனாபத், ஹீரோபன்ட்டி 2 மற்றும் பாகி 4 என டைகர் ஷெராஃப் கையில் ஏகப்பட்ட படங்களும் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X