twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜூலிக்கு வந்த தைரியத்தை பாரேன்: இபிஎஸ் அரசையே கேள்வி கேட்குது

    By Siva
    |

    சென்னை: மக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் அரசு தான் இது. இந்தக் கட்சியும் அதன் ஆட்சியும் வேண்டாம் என்று மக்களே சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து விலகுவார்களா? என்று ஜூலி கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழக அரசு பேருந்து கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்தி மக்களின் தலையில் இடியை இறக்கிவிட்டது. தினமும் பேருந்தில் பயணம் செய்பவர்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள்.

    பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    பணம்

    பணம்

    பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு செமயா வாழணும் என்று ஒருவரை வாழ்த்தும்படி செய்துவிட்டதே இந்த தமிழக அரசு என்று நெட்டிசன்ஸ் நொந்து கொண்டிருக்கிறார்கள்.

    பயணம்

    பயணம்

    பேருந்தில் பயணம் செய்கிறாயா, அப்படி என்றால் நீ நிச்சயம் பணக்காரனாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கேள்வி

    பேருந்துகள் மக்களின் சொத்து. கட்டண உயர்வை மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறது ஆளும் அரசு. மக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் அரசு தான் இது. இந்தக் கட்சியும் அதன் ஆட்சியும் வேண்டாம் என்று மக்களே சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து விலகுவார்களா? என்று நடிகை ஜூலி கேள்வி எழுப்பியுள்ளார்.

    கலாய்

    கலாய்

    ஜூலியின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்களின் சிலர் அவரின் துணிச்சலை பாராட்டியுள்ளனர். பலர் அவரை வழக்கம் போன்று கலாய்த்துள்ளனர். நீ எல்லாம் முதல்வருக்கு அட்வைஸ் பண்ணுவதை பார்க்க முடியல என்று கிண்டல் செய்துள்ளனர்.

    English summary
    Julie took to twitter to express her anger over the sudden increase in bus fare in Tamil Nadu. She has even boldly asked whether TN government will step down as people don't want it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X