அவருக்கு வாழ்த்து சொல்றீங்க.. முன்னாள் காதலர்.. கமிட்டாகியிருக்கிறார்.. வாயே திறக்கலையே திரிஷா!
சென்னை: நடிகர் ராணா தனது காதலியை அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில் நடிகை திரிஷா அவருக்கு வாழ்த்து சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரபல நடிகரான ராணா டக்குபதி தான் கமிட்டான விஷயத்தை நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் படு குஷியாக அறிவித்தார். அவர் எஸ் சொல்லிவிட்டார் என தனது காதலியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்தார் ராணா.
ராணாவின் காதலியான மிஹீகா ஹைத்ராபாத்தை சேர்ந்த பிரபல இன்டீரியர் டிஸைனர் ஆவார். பாலிவுட் பிரபலங்களான ஷாகித் கபூர் மற்றும் சோனம் கபூருடன் நெருக்கமான நட்பு கொண்டவர்.

திரிஷா சொல்லல
ராணா காதலில் விழுந்த தகவலை அறிவித்ததும் டோலிவுட் மட்டுமின்றி கோலிவுட், பாலிவுட் என சினிமாத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் நடிகை திரிஷா இதுவரை ராணாவுக்கு வாழ்த்து கூறவில்லை.

காதல் முறிவு
நடிகை திரிஷாவும் நடிகர் ராணா டக்குபதியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல காதல் ஜோடியாக வலம் வந்தனர். இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் ராணாவுடனான காதலை முறித்துக்கொண்டார் திரிஷா. அதன்பிறகு திரிஷா தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

வாய் திறக்கவில்லை
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அந்த திருமணம் நின்றது. அதன்பிறகு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. ராணாவுடனான காதல் முறிந்தபோதும் கூட பிறந்தநாட்களில் இருவரும் மாறி மாறி வாழ்த்தும் நன்றியும் சொல்லி வந்தனர். ஆனால் காதலில் கமிட்டாகியிருக்கும் ராணாவுக்கு திரிஷா மட்டும் இதுவரை வாழ்த்து சொல்லவில்லை.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல சினிமா தயாரிப்பாளரான தனஞ்ஜெயனுக்கு நடிகை திரிஷா பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். இதனால் அவர் தனது முன்னாள் காதலரான ராணாவுக்கும் வாழ்த்து சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











