வில்லிவாக்கத்தில் 30 நிமிடத்தில் CCTV வீடியோவைக் காட்டும் TVK.. கரூர் வீடியோக்களை வெளியிடுமா? ஜூலி கேள்வி
சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகை மான ஜூலி சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகர் விஜய் அவரது கட்சியின் ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய்யின் ரசிகர்களை காட்டமாக விமர்சித்துள்ளார். அதில் வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரத்தில் பாட்டில்களை வீசியவர்கள் குறித்த சிசிடிவி வீடியோவை 30 நிமிடத்தில் கண்டுபிடித்து வெளியிட்ட ஆதவ் அர்ஜுனாவும் தமிழக வெற்றிக் கழகமும் கரூர் துயர சம்பவத்தில் விஜயின் வாகனத்தை சுற்றி இருந்த சிசிடிவி வீடியோக்களை வெளியிடுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா செய்தது மிகவும் பழமையான அரசியல் டெக்னிக். இதெல்லாம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் அரசியல் டெக்னிக்குகள். அவர்கள் தான் இஸ்லாமியர்கள் போல வேடம் அணிந்து கொண்டு வந்து கலவரத்தை செய்து விட்டு அதன் பின்னர் விசாரிக்கையில் அதை இஸ்லாமியர் அல்ல, அவர் பாஜகவை சேர்ந்தவர் அல்லது ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரியவரும். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்தவர்கள் சுமார் 50 பேருக்கு மேல் தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த போதே, இதுபோல ஏதாவது நடக்கும் என்று நான் முன்னரே யூகித்தேன். ஆனால் விஜய் அதை ரொம்பவும் முன்கூட்டியே நடைமுறைப்படுத்தி விட்டார்.

சிம்பதி ஓட்டு: தேர்தல் என்பது திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்த வரையில் ஒரு திருவிழா மாதிரி. அப்படி இருக்கையில் நாங்கள், நாங்கள் செய்த சாதனைகள், செய்ய உள்ள திட்டங்கள் குறித்து மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டிய காலகட்டம் இது. நாங்கள் தீவிரமாக இந்த வேலையில் இருக்கும் போது நீங்கள் குறுக்கே மறுக்க ஓடி காமெடி செய்து கொண்டு இருக்க வேண்டாம். நான் ஏற்கனவே சொன்னது தான் ஐம்பதை 500 ஆக்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை உருவாக்கி அதை ஓட்டாக மாற்றும் முயற்சியில் விஜய் இருக்கிறார் அவரது இந்த திட்டம் ஈடேறாது.
கரூர்: வில்லிவாக்கத்தில் கூட்டத்திற்குள் பாட்டில் வீசியவர்கள் தொடர்பான வீடியோவை 30 நிமிடத்தில் வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா, கரூர் துயர சம்பவத்தில் விஜய் வாகனத்தை சுற்றி இருந்த சிசிடிவி ஃபுட்டேஜ்கள் மற்றும் விஜய்யை வீடியோ எடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவாரா அல்லது அதையும் அண்ணன் செந்தில் பாலாஜி தான் டெலிட் செய்து விட்டார் என்று பொய் சொல்லப் போகிறீர்களா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆதரவு: ஜூலியின் இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் அரசியல் தளத்தில் அவரது கேள்வி நியாயம் என்று பலரும் தெரிவிக்கும் வகையில் உள்ளது. வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்திற்குள் பாட்டிலை வீசியவர்கள் குறித்த சிசிடிவி வீடியோவை 30 நிமிடத்தில் வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா, கரூர் துயர சம்பவத்தை திமுகவின் சதி என்று கூறுகிறார். அப்படியானால் தவெக தலைவர் விஜய் வாகனத்தைச் சுற்றி இருந்த சிசிடிவி வீடியோக்களை வெளியிடலாமே என்று கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











