கமல் எடுத்த அதே முடிவை எடுப்பாரா உதயநிதி ஸ்டாலின்?

By Siva

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன் எடுத்த அதே முடிவை உதயநிதி ஸ்டாலினும் எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திரைப்பட தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு நல்ல நாளில் ஹீரோவானார். தனது பிளஸ் மற்றும் மைனஸ் எது என்பதை நன்கு புரிந்து வைத்துள்ள அவர் தனக்கு எது வருமோ அதை மட்டுமே திரையில் காட்டி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தனது தந்தையான திமுக தலைவரான மு.க. ஸ்டாலினுக்கு உதவியாக இருந்து வரும் அவருக்கு இன்று முக்கியமான நாள்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞர் அணி செயலாளர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினை திமுக இளைஞரணி செயலாளராக பார்க்க அவரின் ஆதரவாளர்கள் ஆவலுடன் காத்திருந்தது வீண் போகவில்லை.

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

உலக நாயகன் கமல் ஹாஸன் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட ஏதுவாக இனி படங்களில் நடிப்பது இல்லை என்று முடிவு எடுத்தார். படங்களில் நடிக்காவிட்டாலும் தயாரிப்பதை அவர் நிறுத்தப் போவது இல்லை. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினும் கமல் வழியில் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பதவி

பதவி

1985ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இளைஞரணி செயலாளர் பதவியில் மு.க. ஸ்டாலின் 32 ஆண்டுகளாக நீடித்தார். கடந்த 2017ம் ஆண்டு அவர் அந்த பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு முன்னாள் அமைச்சரும், 3 முறை எம்.எல்.ஏ.வுமான வெள்ளக்கோவில் சாமிநாதன் அந்த பதவிக்கு வந்தார். இந்நிலையில் ஸ்டாலின் நீண்ட காலமாக வகித்த அதிகாரமிக்க பதவி உதயநிதியிடம் இன்று வந்துள்ளது. 40 மாவட்ட செயலாளர்கள் உதயநிதிக்கு ஆதரவு தெரிவித்து தலைமை கழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்களாம்.

சினிமா

சினிமா

உதயநிதி ஸ்டாலின் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் சைகோ படத்தில் நடித்து வருகிறார். இது தவிர ஏஞ்சல், கண்ணை நம்பாதே ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்தால் இந்த பட வேலைகளை முடித்த பிறகே முழு நேர அரசியலில் ஈடுபடுவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X