அஜீத்தின் ‘வி’ சென்டிமென்ட் ‘வீரம்: ஆகஸ்ட் 15ல் ஃபர்ஸ்ட் லுக்
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திற்கு வீரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
வான்மதி, வாலி, வில்லன், வரலாறு வரிசையில் வீரம் படமும் வெற்றிப்படமாக அமையும் என்று அஜீத் ரசிகர்கள் இப்போதே கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
தல அஜீத்தின் 53 வது படம் 'ஆரம்பம்' விஷ்ணுவர்த்தன் இயக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரடெக்சன் நடைபெற்றுக் கொண்டிக்கிறது.

அஜீத்தின் 54 வது படம்
அஜீத்தின் 54 வது படத்திற்கு வீரம் என்று பெயர் வைத்துள்ளனர். பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் நாகிரெட்டியின் நூற்றாண்டு விழாவையொட்டி தயாரிக்கப்படும் சிறப்புத் திரைப்படம் இது. விஜயா நிறுவனம் சார்பில் பாரதி ரெட்டி தயாரிக்கிறார்.

வி வரிசை படங்கள்
ஆங்கில எழுத்தான வி வரிசையில் வான்மதி, வாலி, வில்லன், வரலாறு என நான்கு படங்களில் அஜீத் நடித்துள்ளார். இது அனைத்துமே வெற்றிப்படங்கள்தான்.

வீரம் வெற்றியடையுமா?
இவற்றின் வரிசையில் வீரம் படமும் வெற்றிப்படமாக அமையும் என்று ரசிகர்கள் இப்போதே கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

பொங்கலுக்கு வீரம்
வீரம் படத்தில் தமன்னா, விதார்த், சந்தானம், ரமேஷ்கண்ணா, ஆகியோர் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அஜீத்தின் 54 வது படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் என்கின்றனர்

ஆகஸ்ட் 15ல்
வீரம் படத்தின் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 15ல் வெளியிடப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திரா, ஒரிஸா
சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்ட பின்னர் படத்தின் அடுத்த ஷெட்யூல் ஆந்திரா, ஒரிஸாவில் படமாக்கி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











