சூர்யா பிறந்தநாள் ட்ரீட்...வாடிவாசல் க்ளிம்ப்ஸ் இன்று வருதா?...காத்திருக்கும் ரசிகர்கள்
சென்னை : நடிகர் சூர்யா இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் சூர்யா தொடர்பான ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

சூர்யாவின் பிறந்தநாளை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாள் ட்ரீட்டாக அவர் தற்போது நடித்து வரும் படங்களின் புதிய அப்டேட்கள் ஏதாவது வெளியாகுமா, எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Recommended Video
கடந்த ஆண்டு சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக எதற்கும் துணிந்தவன் படத்தின் க்ளிப்ம்சை, டைட்டிலுடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. ஆனால் இந்த முறை அப்படியில்லை. சூர்யா ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட்டாகி நடிப்பதால் எந்த படத்திற்கு அப்டேட் கேட்பது, எதை விடுவது என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.
டைரக்டர் பாலா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் சூர்யா 41 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில், சூர்யாவின் பிறந்தநாளன்று தான் வெளியாகும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், சூர்யா பிறந்தநாளுக்கு முன் டைரக்டர் பாலாவின் பிறந்தநாள் வந்ததால் அன்றைக்கே டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு விட்டார்கள்.
இதனால் இன்று பிறந்தநாள் ட்ரீட்டாக வாடிவாசல், சூர்யா 62 படங்களின் அப்டேட் ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் லேட்டஸ்ட் தகவலாக, டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் க்ளிம்ப்ஸ் இன்று மாலை 5.30 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த க்ளிம்ப்சில் சூர்யா ,ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட டெஸ்ட் ஷுட்டின் போதே சூர்யா பிறந்தநாளுக்கான க்ளிம்ப்ஸிற்காக சில ஷாட்களும் எடுக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சோஷியல் மீடியாவில் பரவும் இந்த தகவலால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.
அதுமட்டுமின்றி டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, வணங்கான் படத்திற்கு பிறகு நடிக்க உள்ளதாக சொல்லப்படும் சூர்யா 42 படத்தின் அறிவிப்பும் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட உள்ளதாக ஏற்கனவே கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications










