கோட் விஜய்யுடன் மோதப் போவது விடாமுயற்சி அஜித்தா? கங்குவா சூர்யாவா?.. மயான அமைதி ஏன்?
சென்னை: இந்த ஆண்டு வெளியாக உள்ள பெரிய படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சூர்யாவின் கங்குவா மற்றும் அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதிகள் இன்னமும் வெளியாகாத நிலையில், சூர்யா ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் விஜய்யின் கோட் படத்துடன் அந்த படங்கள் மோதப் போவதாக போஸ்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு தளபதி விஜய் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியை முன்னதாக அறிவித்திருந்தார். அதே நாளில் தன்னுடைய படத்தையும் ரிலீஸ் செய்ய நடிகர் அஜித் முடிவு செய்தார். வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதின.

இந்நிலையில், கோட் படத்துடன் விடாமுயற்சி படம் மோதுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல கங்குவா படமும் கோட் படத்துடன் மோதுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
கோட் ரிலீஸ் தேதி: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த அப்டேட் கொடுத்து விடலாமா என வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தி வெளிநாட்டில் இருந்து வெளியிட்ட புதிய புகைப்படம் தற்போது தீயாக பரவி வருகிறது.
கோட் படத்துடன் மோதல்: ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அஜித் விடாமுயற்சி படத்தில் நடிக்க ஆரம்பிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. துணிவு படத்தை வைத்து வாரிசு படத்துடன் மோதிய நடிகர் அஜித் ஏகே 62 படம் மூலமாக லியோ படத்துடன் கிளாஷ் விட நினைத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், விடாமுயற்சி படம் தாமதமான நிலையில் தற்போது கோட் படத்துடன் விடாமுயற்சி படத்தை அஜித் கிளாஷுக்கு விடுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சூர்யா கெத்து காட்டுவாரா?: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் பான் இந்திய அளவில் மிகப்பெரிய பிரம்மாண்டமான படமாக வெளியாகும் நிலையில், விஜய்யின் கோட் படத்துடன் துணிந்து மோதுமா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சூர்யா ரசிகர்கள் இந்த முறை தளபதி விஜய்யுடன் சூர்யா கிளாஷ் விட்டால் விஜய்க்குத்தான் ஆபத்து என உறுதியாக நம்பி வருகின்றனர். டீசர் எல்லாம் வெளியான பின்னரும் இன்னமும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகவில்லை.
மயான அமைதி: அஜித்தின் விடாமுயற்சி படத்தின் விபத்து வீடியோவை எல்லாம் வெளியிட்ட லைகா நிறுவனம் இந்தியன் 2 ரிலீஸ் ஜூன் மாதம் என்றும் ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் தேதி அக்டோபர் மாதம் என்றும் அறிவித்த லைகா நிறுவனம் விடாமுயற்சி படம் குறித்த ரிலீஸ் அறிவிப்பை இன்னமும் வெளியிடாமல் மயான அமைதியாக இருப்பது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த ஆண்டு எந்தவொரு பெரிய படங்களும் மோதாமல் தனியாக வந்தால் தான் தமிழ் சினிமாவுக்கும் அந்த படங்களுக்கும் நல்லது எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











