செஞ்சிட்டா போச்சு.. மறுபடியும் விருப்பத்தை ஓப்பனாக சொன்ன அட்லி.. வாய்ப்பு கொடுப்பாரா விஜய்?

சென்னை: பிகில் படம் வெளியான போதே, ராயப்பன் கதாபாத்திரத்திற்கு ஒரு ப்ரீக்வல் ரெடி பண்ணுங்க என ரசிகர்கள் கேட்டதற்கு, செஞ்சிட்டா போச்சு என அட்லி ட்வீட் போட்டு இருந்தார்.

இந்நிலையில், அமேசான் பிரைம் சமீபத்தில் கேட்டதற்கும் அதே ட்வீட்டை மீண்டும் தட்டி விட்டிருக்கிறார் இயக்குநர் அட்லி.

ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து ஒரு படத்தை இயக்க அட்லி ரெடியாக இருக்கும் சூழலில் நடிகர் விஜய் அதற்கு சம்மதம் தெரிவிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

3 கெட்டப்

3 கெட்டப்

ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களிலும் நடிகர் விஜய்க்கு 3 கெட்டப் போட்டு அசத்தியிருப்பார் அட்லி. தெறி படத்தில் விஜயகுமார் ஐபிஎஸ், ஜோசப் குருவிலா என இரண்டு கெட்டப்பிலும், கிளைமேக்ஸில் ஒரு லுக்கிலும் வருவார்.

மெர்சலில் மிரட்டல்

மெர்சலில் மிரட்டல்

தெறி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஜய் - அட்லி கூட்டணி இணைந்து உருவான மெர்சல் படத்தில் அப்பா வெற்றிமாறன், மகன்கள் வெற்றி மற்றும் மாறன் என 3 ரோல்களில் நடிகர் விஜய் பட்டையை கிளப்பி இருப்பார். மெர்சல் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பிகில் படத்தை இயக்கும் வாய்ப்பையும் விஜய் அட்லிக்கு கொடுத்தார்.

ராயப்பன்

ராயப்பன்

மைக்கேல், ராயப்பன், பிகில் என மூன்று லுக்கில் இந்த படத்திலும் நடிகர் விஜய்யை வேறலெவலில் நடிக்க வைத்து மாஸ் காட்டியிருப்பார் இயக்குநர் அட்லி. காப்பி கேட் விமர்சனங்கள் எதுவந்தாலும், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இன்ஸ்பிரேஷன் என சொல்லி அதிரடி காட்டிய அட்லி மீண்டும் விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஷாருக்கான் படம்

ஷாருக்கான் படம்

பிகில் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் ஷாருக்கானின் படத்தை இயக்க சென்ற அட்லி, பல ஆண்டுகளாக அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஷாருக்கான் எப்போது தான் விடுவார் என ரொம்பவே விரக்தியுடன் காத்துக் கொண்டு இருக்கிறார். எப்படியாவது மீண்டும் விஜய்யுடன் படம் பண்ண வேண்டும் என்கிற ஆவலில் காத்துக் கொண்டிருக்கிறார் அட்லி என்பது தற்போது அவர் போட்டுள்ள ட்வீட்டை பார்த்தாலே தெரிகிறது.

செஞ்சிட்டா போச்சு

செஞ்சிட்டா போச்சு

முழுக்க முழுக்க ராயப்பன் கதாபாத்திரத்தையே கொண்டு ஒரு படத்தை அட்லி உருவாக்கினால் எப்படி இருக்கும் என அமேசான் பிரைம் ட்வீட் போட, அதற்கு ராயப்பன் ஸ்டைலிலேயே செஞ்சிட்டா போச்சு என ட்வீட் போட்டு மீண்டும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளார் அட்லி. தளபதி 66, தளபதி 67 என வம்சி மற்றும் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் அடுத்தடுத்து பணியாற்ற உள்ள நிலையி,ல் தளபதி 68 படத்தின் வாய்ப்பாவது அட்லிக்கு கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விஜய் சம்மதிப்பாரா

விஜய் சம்மதிப்பாரா

பிகில் படத்தில் மைக்கேல், ராயப்பன், பிகில் என வெரைட்டி இருந்த நிலையில் தான் விஜய் ஓகே சொன்னார். வெறுமனே ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து டார்க் ஷேடில் படத்தை உருவாக்க அட்லி முடிவு செய்தாலும், கம்ப்ளிட் பேக்கேஜாக படத்தை எதிர்பார்க்கும் விஜய் அதற்கு சம்மதம் தெரிவிப்பாரா? என்பது சந்தேகம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X