சகாப்தத்தில் கேப்டன் இருக்கார், இளைய தளபதி இருக்காரா?

By Siva

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மகனின் சகாப்தம் படத்தில் கௌரவத் தோற்றத்தில் வருகிறார். ஆனால் விஜய் வருவாரா என்று தெரியவில்லை.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது இளைய மகன் ஷண்முக பாண்டியனை சகாப்தம் படம் மூலம் ஹீரோவாக்கியுள்ளார். விஜயகாந்த் தயாரித்துள்ள இந்த படத்தை பார்த்து பார்த்து காட்சி காட்சியாக எடுக்கிறார் இல்லை செதுக்குகிறார்.

பிற விஷயங்களில் விஜயகாந்த் அவசரப்பட்டு பேசினாலும் மகனின் படக்கதையை மட்டும் பரம ரகசியமாகவே இன்று வரை வைத்துள்ளார். கதை மட்டும் அல்ல படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி கூட எந்த செய்தியும் வெளியாகவில்லை.

இயக்குனர்

இயக்குனர்

விஜயகாந்த் அன்ட் கோ அனைத்து விஷயங்களிலும் தலையிட்டதால் இயக்கத்தை கையில் எடுத்துக் கொண்டதால் சகாப்தம் இயக்குனர் சந்தோஷ் குமார் ராஜன் யாரிடமும் கூறாமல் ஓட்டம் பிடித்துவிட்டார். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஓடியதால் தான் அங்கு நடந்த சில சம்பவங்கள் பற்றிய தகவல்கள் கசிந்தன.

கேப்டன்

கேப்டன்

சகாப்தம் படத்தில் விஜயகாந்த் கௌரவத் தோற்றத்தில் வருகிறார். என்ன தான் அரசியலில் பிசியாக இருந்தாலும் மகனுக்காக நேரம் ஒதுக்க தவறவில்லை கேப்டன்.

இளைய தளபதி

இளைய தளபதி

சகாப்தம் படத்தில் இளையதளபதி விஜய் கௌரவத் தோற்றத்தில் நடிப்பார் என்று ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு அது பற்றி பேச்சே இல்லை. விஜய் நடிக்கிறாரா, இல்லையா என்று விஜயகாந்த் தான் கூற வேண்டும்.

பிரமாண்டம்

பிரமாண்டம்

ஷண்முக பாண்டிக்கு இது முதல் படம் என்றாலும் அதை அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக எடுத்து வருகிறார் விஜயகாந்த். இளையதளபதி திரை உலகில் நுழைய ஜொலிக்க அவரது தந்தை எஸ்.ஏ.சி. உதவியது போல ஷண்முக பாண்டிக்கு விஜயகாந்த் உதவுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X