விஜய், சூர்யா வருவார்களா? மாட்டார்களா? குழப்பத்தில் ரசிகர்கள்.. என்ன ஆகப் போகுதோ விக்ரம் விழா!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், விக்ரம் இசை வெளியீட்டு விழாவிலும் சூர்யா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்க போகின்றனர் என்றும் விஜய்யும் பங்கேற்க உள்ளார் என்றும் தகவல்கள் கிளம்பி வருகின்றன.

கண்ணை பறிக்கும் ஸ்டேடியம்
சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் தான் பிரம்மாண்டமாக விக்ரம் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக போகிறது. அதற்காக கண்ணை பறிக்கும் அரங்கம் தயாராகி உள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

சென்னைக்கு வந்தாரா விஜய்
நடிகர் விஜய் ஹைதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு தற்போது விரைந்துள்ளார் என சில புகைப்படங்களையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் வருவது உறுதி என டிடி நீலகண்டன் போட்ட ட்வீட்டையும் குறிப்பிட்டு எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

சூர்யா வருவாரா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் என ஏற்கனவே நட்சத்திர பட்டாளம் களைகட்டி உள்ள நிலையில், கூடுதல் பூஸ்ட்டாக நடிகர் சூர்யாவும் ஸ்பெஷல் கேமியோவில் நடித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும், இன்று நடைபெறும் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் சூர்யா நிச்சயம் பங்கேற்பார் என சூர்யா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றனர்.

குழப்பத்தில் ரசிகர்கள்
ஆனால், விஜய் மற்றும் சூர்யா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என்கிற எந்தவொரு அறிவிப்பையும் ராஜ்கமல் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், விஜய் மற்றும் சூர்யா இருவருமே விக்ரம் பட விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வருவதால் ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இத்தனை பெரிய விழாவை ஏற்பாடு செய்யும் போது ரசிகர்களை இப்படி குழப்பத்தில் ஏன் ஆழ்த்த வேண்டும் என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











