பர்த்டே கேக் புதுசா? பழசான்னு? நோண்டாதீங்க.. குஷ்பு மகள் திருமணத்தில் இருக்கு தளபதி கச்சேரி!
சென்னை: நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி குடும்பத்தில் தற்போது திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இவர்களது மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் நாளை காலை நடைபெறவுள்ள நிலையில், இன்று நடைபெற்று வரும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். இப்படி இருக்கையில், இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது நெருங்கிய தோழியான நடிகை த்ரிஷா கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்புதான் தற்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
அதாவது, நடிகை குஷ்புவுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் நீண்ட காலமாக நல்ல நட்பு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே அவந்திகாவின் திருமணத்திற்கான அழைப்பிதழை குஷ்பு மற்றும் சுந்தர்.சி தம்பதியினர் நேரில் சென்று விஜயிடம் வழங்கியிருந்தனர். அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் அப்போது இணையத்தில் வைரலாகின.

இப்படி இருக்கையில், தற்போது அனைவரது கவனமும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் பக்கம் திரும்பியுள்ளது. காரணம், கடந்த சில மாதங்களாக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பான ஒவ்வொரு விஷயமும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி வருகிறது. குறிப்பாக, ஏ.ஜி.எஸ் நிறுவன உரிமையாளரின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. அந்த நிகழ்வுக்கு பிறகு, இருவரும் தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டாகி வந்தன.
பர்த் டே சர்ச்சை: இந்நிலையில், சமீபத்தில் முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளையொட்டி நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்த வாழ்த்து புகைப்படமும் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. அந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில விஷயங்களை வைத்து, இணையவாசிகள் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், அந்த புகைப்படம் உண்மையா? பழைய புகைப்படமா? அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதா? என்ற விவாதங்களும் சமூக வலைதளங்களில் நடைபெற்றன. சிலர் அது பழைய புகைப்படம் என்று கூறினார்கள். இன்னும் சிலர் ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் கிளப்பினர். ஆனால் அதற்கெல்லாம் எந்த உறுதியான ஆதாரமும் வெளியாகவில்லை.

ஜோடியாக வருவார்களா?: இப்படி இருக்கையில், தற்போது குஷ்பு மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருவதால், விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் இதில் பங்கேற்பார்களா என்ற கேள்விதான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக குஷ்பு குடும்பத்துடன் இருவருக்கும் இருக்கும் நெருக்கத்தை வைத்து பார்த்தால், அவர்கள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொருபுறம், சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்கள் வழக்கம்போல கலாய்ப்புகளையும் தொடங்கி விட்டனர். "பர்த்டே கேக் புதுசா? பழசான்னு? நோண்டி நோண்டி பார்த்தவங்க இப்போ திருமண வரவேற்பு புகைப்படத்தையும் ஜூம் பண்ணி ஆராய்ச்சி பண்ண தயாரா இருக்காங்க" என்றும், "நிகழ்ச்சியை விட போட்டோ வந்தா போதும்... இணையத்தில் ஒரு வாரத்துக்கு கச்சேரிதான்" என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
ஆர்வம்: மொத்தத்தில் குஷ்பு மகள் அவந்திகாவின் திருமணத்தை விட, அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதுதான் தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா வருகை தருகிறார்களா என்பதையே சமூக வலைதள வாசிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஒருவேளை இருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், திருமண புகைப்படங்களை விட அதுதொடர்பான இணைய விவாதங்கள்தான் அடுத்த சில நாட்களுக்கு கச்சேரியாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications