ஓடிடிக்கு செல்கிறதா விஜய் தேவரகொண்டாவின் லைகர்?
ஹைதராபாத் : தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் லைகர் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்து வருகிறார்.
கரண் ஜோகர், நடிகை சார்மி உள்ளிட்ட சிலர் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.
பெரும் பொருட்செலவில் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருக்க இப்படம் ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

படுதோல்வியை
நடித்த சில திரைப்படங்களிலேயே தென்னிந்தியாவின் ஐகானாக மாறியிருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு திரைத் துறையில் அதிக ரசிகர்களை கொண்ட இளம் நடிகராக வலம் வருகிறார். கடைசியாக நடித்திருந்த வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படுதோல்வியை சந்திக்க அடுத்து பிரம்மாண்ட திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

லைகர்
தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ள பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடித்திருக்கும் திரைப்படத்திற்கு லைகர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் மற்றும் நடிகை சார்மி ஆகியோருடன் மேலும் சிலர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

குத்துச்சண்டை வீரராக
ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி இந்தியில் கபிர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டதையடுத்து இப்பொழுது லைகர் படத்தின் மூலம் நேரடியாக இந்தியில் அறிமுகமாகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் விலை லைகர் படத்தில் விஜய் தேவர்கொண்டா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தியா முழுவதும் இந்த படத்திற்கான வரவேற்பு பலமடங்கு உயர்ந்து இருக்கும் நிலையில் பல ஓடிடி நிறுவனங்கள் படக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரானா அச்சம் காரணமாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாததால் முதலில் திரையில் ரிலீஸ் செய்து விட்டு பின் ஓடிடியில் வெளியிட உள்ளனர். எனினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை . மேலும் விஜய் தேவரகொண்டா பிரபல ஓடிடி தளத்தில் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்த உள்ளார்.


Click it and Unblock the Notifications











