ஷாருக்கான் படத்தில் விஜய் கேமியோ.. சம்பளம் எவ்வளவு.. ஷூட்டிங் எங்கே நடக்கப் போகுது தெரியுமா?

சென்னை: விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் கேமியோவாக வந்து செம வெயிட் காட்டிய நிலையில், மற்ற முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களில் பெரிய நடிகர்களை கேமியோவாக புக் செய்து வரும் பழக்கம் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் மகேஷ் பாபு கேமியோவாக நடிக்கப் போகிறார் என்கிற பேச்சு அடிபட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யே ஒரு படத்தில் கேமியோவாக நடிக்கப் போகிறார் என்றும் கூறுகின்றனர்.

ஏற்கனவே சுக்கிரன் படத்தில் எக்ஸ்டன்ட் கேமியோ ரோலில் தான் நடிகர் விஜய் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோலக்ஸ் சூர்யா

ரோலக்ஸ் சூர்யா

கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் என மூன்று தேசிய விருது நடிகர்கள் நடித்த விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் வந்து அசால்டு சம்பவம் செய்து இருப்பார். ஓடிடியில் படம் நேற்று வெளியான நிலையில், சோஷியல் மீடியா முழுக்கவே இன்னமும் ரோலக்ஸின் சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. விக்ரம் 3 அல்லது கைதி 2 எப்போ வரும் இல்லைன்னா தனியா ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கே ஒரு படத்தை பண்ணுங்க லோகேஷ் என ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.

ஷாருக்கான் - சூர்யா

ஷாருக்கான் - சூர்யா

மாதவனின் ராக்கெட்டரி திரைப்படத்தில் தமிழில் சூர்யாவும், இந்திக்கு ஷாருக்கானும் கேமியோ ரோலில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்தனர் என மாதவன் மேடையிலேயே பாராட்டித் தள்ளினார். டாப் ஹீரோக்கள் ஈகோ எல்லாம் பார்க்காமல் சினிமாவின் நலன் கருதி அந்த கதை மற்றும் காட்சியின் வலிமை அறிந்து தற்போது கேமியோ கதாபாத்திரங்களில் தாராளமாக தலை காட்டி செல்கின்றனர்.

ஷாருக்கான் படத்தில் விஜய்

ஷாருக்கான் படத்தில் விஜய்

ஏற்கனவே பிகில் படத்திலேயே ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்கப் போகிறார் என அட்லி - ஷாருக்கான் சந்திப்பை வைத்து ரூமர்கள் கிளம்பின. ஆனால், இம்முறை அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் விஜய் கண்டிப்பாக ஒரு காட்சியில் கேமியோவாக வந்து செல்வார் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளதாக உறுதியான தகவல்கள் கிளம்பி உள்ளன.

சென்னையில் சூட்டிங்

சென்னையில் சூட்டிங்

மேலும், மும்பையில் இருந்து சென்னைக்கே ஜவான் படத்தின் படப்பிடிப்பை சில நாட்கள் நடத்த இயக்குநர் அட்லி திட்டமிட்டு இருப்பதாகவும், வரும் செப்டம்பரில் நடைபெற உள்ள அந்த படப்பிடிப்பின் போது ஒரு நாள் கால்ஷீட்டில் நடிகர் விஜய் முக்கியமான காட்சி ஒன்றில் கேமியோவாக வந்து செல்லப் போகிறார் என்கிற உறுதியான தகவல் சினிமா வட்டாரம் முழுக்க டிரெண்டாகி வருகிறது.

நயன்தாரா

நயன்தாரா

ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். நயன்தாராவின் திருமணத்துக்காக சென்னைக்கு வந்த நிலையில், ஷாருக்கானுக்கு ஜவான் படத்தின் சில காட்சிகளை இங்கே வைத்துக் கொள்ளலாம் என தோன்றிய நிலையில் தான் அட்லியிடம் கூற படப்பிடிப்பு மும்பையில் இருந்து சென்னைக்கு மாறப் போவதாகவும் கூறுகின்றனர்.

இன்னொரு கேமியோ

இன்னொரு கேமியோ

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்து வரும் ஜவான் படத்தில் விஜய் மட்டுமின்றி நடிகை தீபிகா படுகோனும் இன்னொரு கேமியோவாக வரப் போவதாகவும் ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. ஷாருக்கானின் பதான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் தீபிகா படுகோன் ஜவான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வரப் போகும் நிலையில், விஜய்க்கு ஜோடியாக அவரை அட்லி காட்டப் போகிறாரா? அல்லது நயனின் கிரஷ் விஜய், ஷாருக்கின் கிரஷ் தீபிகா படுகோன் என காட்சி இருக்குமா என ஏகப்பட்ட விவாதங்களும் ஆரம்பித்துள்ளன.

விஜய்க்கு எவ்வளவு சம்பளம்

விஜய்க்கு எவ்வளவு சம்பளம்

ஷாருக்கானின் ஜவான் படத்தில் ஒரு நாள் கேமியோ ரோலில் நடிக்க நடிகர் விஜய் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கப் போவதில்லையாம்.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், என் தம்பிக்கு நான் தான் பண்ணுவேன்னு இலவசமாக நடித்துக் கொடுக்கப் போவதாக கூறுகின்றனர். பாலிவுட் படங்கள் தென்னிந்தியாவிலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்க வேண்டுமானால் இதுபோன்ற கேமியோ காட்சிகள் இருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X