twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தயாரிப்பாளரா.. ரசிகர்களா.. மாஸ்டர் பட ரிலீஸ் குறித்து தளபதி விஜய்யின் பிளான் என்ன?

    |

    சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் எப்படி ரிலீசாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Recommended Video

    Surya Soorarai Pottru OTT Release | பின்னணி என்ன?

    சூர்யாவின் சூரரைப் போற்று படமும் மாஸ்டர் படமும் தியேட்டரில் ஒன்றாக ரிலீஸ் ஆகி பயங்கர கிளாஷ் ஆகும் என்ற எதிர்பார்ப்புகள் தற்போது தகர்ந்துள்ளன.

    ஒரு தயாரிப்பாளராக சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளார். மாஸ்டர் பட தயாரிப்பாளரை மனதில் வைத்து நடிகர் விஜய் இதே முடிவை எடுப்பாரா? இல்லை ரசிகர்களுக்காக அடுத்த ஆண்டு வரை காத்திருப்பாரா? என்ற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    அமேசானில் வெளியாகிறது சூர்யாவின் சூரரைப் போற்று.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. இதுதான் ரிலீஸ் தேதி! அமேசானில் வெளியாகிறது சூர்யாவின் சூரரைப் போற்று.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. இதுதான் ரிலீஸ் தேதி!

    பெரிய படங்கள்

    பெரிய படங்கள்

    பாலிவுட்டில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய படங்களான அக்‌ஷய் குமாரின் லக்‌ஷ்மி பாம், சூர்யவன்ஷி, ரன்வீர் சிங்கின் ‘83', ஆலியா பட்டின் சடக் 2, அஜய் தேவ்கனின் ‘புஜ்', உள்ளிட்ட ஏகப்பட்ட படங்கள் நேரடியாக OTTல் ரிலீஸ் செய்ய முடிவு செய்து விட்டன. தமிழிலும் இதுவரை பொன்மகள் வந்தாள், பெண்குயின் உள்ளிட்ட படங்கள் ஆன்லைனில் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ளன.

    தீபாவளிக்கு தியேட்டர்கள் திறக்குமா?

    தீபாவளிக்கு தியேட்டர்கள் திறக்குமா?

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கே கூட்டம் கூடக் கூடாது என்பதற்காக, வீட்டிலேயே விநாயகரை வழிபட சொல்லி உள்ள தமிழக அரசு, நிச்சயம் தீபாவளிக்கு தியேட்டர்களை திறந்து விட்டால், மக்கள் கூட்டத்தை, அதுவும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் வந்தால், கட்டுப்படுத்தவே முடியாது என்பதை நன்கு உணர்ந்திருக்கும். அதனால், இந்த ஆண்டு இறுதி வரை தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

    சூர்யாவின் அதிரடி முடிவு

    சூர்யாவின் அதிரடி முடிவு

    இதனை நன்கு உணர்ந்து கொண்ட நடிகர் சூர்யா, தனது தயாரிப்பில் உருவான சூரரைப் போற்று படத்தை வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியிட முடிவு செய்துள்ளார். இதன் மூலமாக, நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை வரை தியேட்டர்கள் திறக்காது என்பதை அவர் கணித்துள்ளது புரிகிறது.

    சூர்யாவின் வழியில்

    சூர்யாவின் வழியில்

    தயாரிப்பாளராக சூர்யா சிந்தித்து இப்படியொரு அதிரடி முடிவை எடுத்துள்ள நிலையில், முழுசா ரெடியான பல படங்களை தமிழ்நாட்டில் ஆன்லைனில் நேரடியாக ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள் என்பது நிச்சயம். கோடிக்கணக்கில் கடன் பட்டு படம் எடுத்த அவர்களுக்கு வட்டி எகிறிக் கொண்டே போவது தான் பெரிய கவலையாகவும் சுமையாகவும் உள்ளது.

    தியேட்டர்கள் திறந்தாலும்

    தியேட்டர்கள் திறந்தாலும்

    ஒருவேளை தீபாவளிக்கு முன்னதாக தியேட்டர்களை திறக்க அரசு முடிவு செய்தாலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக 25 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும் நிலை உருவாகும். மேலும், முன்பை போல குடும்பங்கள் தியேட்டரை நோக்கி படையெடுக்குமா? என்பதும் இந்த கொரோனா காலத்தில் பில்லியன் டாலர் கேள்வி தான்.

    வெயிட்டிங் லிஸ்டில்

    வெயிட்டிங் லிஸ்டில்

    தளபதி விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜகமே தந்திரம், ஜெயம் ரவியின் பூமி, விஜய்சேதுபதியின் லாபம், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களுடன் முழுதாக முடிக்கப்பட்டு தியேட்டருக்கு வர நூற்றுக்கணக்கான சிறு பட்ஜெட் படங்களும் காத்துக் கிடக்கின்றன. தியேட்டர்கள் திறந்தாலும், வாரத்திற்கு 6 படங்கள் ரிலீசானால் அப்போதும் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

    மாஸ்டர் பிளான் என்ன?

    மாஸ்டர் பிளான் என்ன?

    இந்நிலையில், தளபதி விஜய் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவை கருத்தில் கொண்டு OTT தளத்தில் இந்த ஆண்டுக்குள் படத்தை ரிலீஸ் செய்வாரா? அல்லது தனது ரசிகர்கள் பலம் மற்றும் தியேட்டர் ஓனர்களின் நலம் கருதி அடுத்த ஆண்டு பொங்கல் வரை வெயிட் செய்வாரா? என்பதை அறிந்து கொள்ள ஒட்டுமொத்த கோலிவுட்டே காத்திருக்கிறது.

    பொங்கல் ரிலீஸ்

    பொங்கல் ரிலீஸ்

    இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுக்குள் வந்தால் தான் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்கள் திருவிழாக் கோலம் காணும். வெளிநாடுகளில், லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், 200 சீட்டுக்கு வெறும் 4 பேர் வரும் அவல நிலைகளும் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கிரமே இந்த கொரோனா பிரச்சனை ஒழிவதே எல்லோருக்கும் நன்மையை பயக்கும்.

    English summary
    After the Soorarai Pottru release announcement by Suriya, now all are seeking what will do Thalapathy Vijay for Master release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X