சங்கீதா அண்ணிக்கு நியாயம் வேண்டும்.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்.. முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்?
சென்னை: தமிழ் சினிமாவில் திடீரென ஏகப்பட்ட பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகின்றனர். தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி. பிரகாஷ், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சீனு ராமசாமி என பல பிரபலங்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விஜய் பற்றிய வதந்தி ஒன்று தீயாக புகைந்து வந்தாலும், அதை அப்படியே கண்டுக் கொள்ளாமல் விஜய் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு கோவா சென்ற விஜய் த்ரிஷாவுடன் தனி விமானத்தில் சென்றார் என ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நெட்டிசன்கள் #JusticeforSangeetha ஹாஷ்டேக்கை நேற்று முதல் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பத்திரிகையாளர் அந்தணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜய் கூடிய சீக்கிரமே ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தியை சொல்வார் என்றும் பேசியிருப்பது பகீர் கிளப்பியுள்ளது.
விஜய்யுடன் த்ரிஷா: நடிகை த்ரிஷா விஜய்யுடன் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ மற்றும் இந்த ஆண்டு வெளியான கோட் படத்தில் குத்தாட்டம் என தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். லியோ படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா இடையே நடைபெற்ற அந்த லிப் லாக் முத்தக் காட்சியில் இருந்தே விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்ப ஆரம்பித்தன. அதே போல நடிகர் விஜய்யுடன் அடிக்கடி த்ரிஷா போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்களும் விஜய் மற்றும் த்ரிஷா இருவருமே ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருவதாகவும் ஏகப்பட்ட பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் அடிபட்டு வருகின்றன.
குடும்பத்துடன் இல்லையா?: நடிகர் விஜய்யின் அரசியல் மாநாடு, பட விழாக்கள், பிரபலங்களின் சுப நிகழ்ச்சிக்கு விஜய் செல்லும் போது சமீப காலமாக சங்கீதா விஜய் உடன் வருவதில்லை. மேலும், ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் என்கிற அறிவிப்பு வரும் போதும், விஜய்யுடன் அவர் இல்லை. அம்மா சங்கீதா விஜய் தான் தனது மகன் ஜேசன் சஞ்சய்யை லைகா தயாரிப்பு நிறுவனத்தில் படம் பண்ணுவதற்கு தேவையான வேலைகளை பார்த்தார் என்றும் கூறுகின்றனர்.
த்ரிஷாவுடன் கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு சென்ற விஜய்: நடிகர் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷையும் கோர்த்து விட்டு ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால், கடைசியில் கீர்த்தி சுரேஷ் 14 ஆண்டுகளாக காதலித்து வந்த ஆண்டனி தட்டில் என்பவரை கடந்த டிசம்பர் 12ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். அந்த திருமணத்துக்கு தனது மனைவி சங்கீதாவுடன் விஜய் செல்லாமல் த்ரிஷாவுடன் சென்றார் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரெண்டாகும் சங்கீதா ஹாஷ்டேக்: #JusticeforSangeetha ஹாஷ்டேக்கை போட்டு நேற்று முதல் விஜய்யின் ஹேட்டர்கள் பலர் சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் செய்வது நியாயம் கிடையாது என்றும் சொந்த குடும்பத்தை பிரிந்துவிட்டு த்ரிஷாவுடன் சுற்றுவது சரியல்ல என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்?: நடிகர் விஜய் தவெக மாநாட்டுக்கு கூட தனது மனைவி சங்கீதாவை அழைத்து வரவில்லை. தொடர்ந்து விஜய் மற்றும் த்ரிஷா குறித்த வதந்திகள் இந்தளவுக்கு பரவி வரும் நிலையில், இதற்கு விஜய் எந்த வகையிலாவது முற்றுப்புள்ளி வைப்பாரா? என்கிற கேள்விகளை சினிமா வட்டாரத்தில் பலர் வெளிப்படையாகவே கிளப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











